Dhanush
Dhanush

Dhanush: தன்னைச்சுற்றி எந்த பிரச்சனையை நடந்து கொண்டு இருந்தாலும் தான் எடுத்த வேலையில் கவனமாக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் அவருடைய அடுத்தடுத்த திட்டங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் ஹாலிவுட் பக்கம் சென்று திரும்பியவர் நடிகர் தனுஷ். ஒரே நேரத்தில் பல துறைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகிறார். நடிப்பில் மட்டுமல்லாது டைரக்ஷனிலும் சில நாட்களாக பிசியாக இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: இப்படியே போனா நாடும் நாட்டு மக்களும்…. சூது கவ்வும் 2வுக்கு வெளியான அதிரடி வீடியோ

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அவர் இயக்கத்தில் வெளியான ராயன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வரவேற்பை பெற்றது. தற்போது அவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் இட்லி கடை திரைப்படத்தில் அவர் நடிக்கவும் செய்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய இடத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் கடைசி கட்டத்தை நெருங்கி விட்டது.

இதையும் படிங்க: விக்ரமின் அடுத்த படம் இந்த இயக்குனர் கூடவா?… எஸ்கே-வை தொடர்ந்து சியானுக்கு ஒரு ஹிட்டு பார்சல்!…

இது நடக்கும் பட்சத்தில் அடுத்த 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியை தனுஷின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தன்னை சுற்றி எந்த வதந்திகள் மற்றும் பிரச்சனைகள் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய சினிமா கேரியர் மீது மட்டுமே கவனமாக இருப்பது என்னவோ இவருடைய தனிப்பட்ட ஸ்டைல்தான்.