தனுஷ் படங்கள் இத்தனை கோடி வசூல் செய்கிறதா?!. இது தெரிஞ்சா சம்பளத்த ஏத்திடுவாரே!..

Actor dhanush: துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் தனுஷ், அதன்பின் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை என வெரைட்டியான திரைப்படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதைகளிலும், ஒரு பக்கம் பக்கா கமர்ஷியல் மசாலா கதைகளிலும் நடித்து வரும் நடிகர் இவர்.

மாரி படத்திலும் நடிப்பார். வெற்றிமாறனோடு கை கோர்த்து அசுரன் போன்ற படங்களிலும் நடிப்பார். ஒருபக்கம், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனருடன் இணைந்து ‘கர்ணன்’ படத்திலும் நடிப்பார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கும் நடிகர் இவர்.

இதையும் படிங்க: அதெல்லாம் விஜய்க்குத்தான் செட்டாகும்! அஜித்தை வைத்து புது முயற்சி எடுக்கப் போகும் ஆதிக் – பாக்க முடியுமா?

ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடிப்புக்கான தேசிய விருதையும் பெற்ற நடிகர் இவர். சமீபகாலமாக இவரின் படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது. வாத்தி படம் அப்படித்தான் உருவானது. இவர் நடித்து முடித்துள்ள கேப்டன் மில்லர் படம் ரசிகர்ளிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது தனுஷ் அவரே இயக்கி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது அவரின் 50வது திரைப்படமாகும். தனுஷின் படங்கள் என்ன வியாபாரம் ஆகும் என்பது பலருக்கும் தெரியாது. விஜய், அஜித், ரஜினி ஆகியோரின் படங்கள்தான் 200 கோடியை தாண்டி வசூலிக்கும் என சொல்ல எல்லோரும் நினைக்கிறார்கள்.

இதையும் படிங்க: நல்லாதானே போச்சு..! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியில் மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பும் லாரன்ஸ்.. அலறும் ரசிகர்கள்..!

ஆனால், தனுஷின் படங்களும் இப்போது அந்த நிலையை எட்டியுள்ளது. தமிழ்நாடு திரையரங்க உரிமை, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி உரிமை, வெளிநாட்டு உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி மற்றும் சேட்டிலைட் உரிமை என எல்லாவற்றையும் வைத்து பார்த்தால் தனுஷின் படங்கள் 200 கோடியை தொட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் இப்போது 30லிருந்து 40 கோடி வரை சம்பளம் பெற்றுவருகிறார். இந்த தகவல் அவருக்கு தெரிந்தால் மேலும் 20 கோடி ஏற்றிவிடுவார் என திரையுலகில் பேசிக்கொள்கிறார்கள்.

 

Related Articles

Next Story