Categories: Cinema News latest news

ப.பாண்டியில் செஞ்சதை இந்த படத்துக்கு செய்யலை… யாரும் சொன்னாலும் நம்பாதீங்க.. தனுஷ் தரப்பு விளக்கம்..!

Dhanush: தனுஷ் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் நிலையில் கூட அவர் தற்போது மீண்டும் படம் இயக்கும் வேலையில் இறங்கி இருக்காராம். இது குறித்த சமீபத்திய தகவல் தான் இணையத்தில் ரவுண்ட்டு கட்டி வருகிறது. அதில் சில வதந்திகளும் இருப்பதாக தெரிகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் நடிகராக வந்த தனுஷ். முதல் படத்தில் தோற்றத்துக்காக விமர்சிக்கப்பட்டாலும் நடிப்பில் பட்டையை கிளப்பினார். அதை தொடர்ந்து காதல் கொண்டேன், தேவதையைக் கண்டேன் என அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்ட் தான்.

இதையும் படிங்க: அதெல்லாம் விஜய்க்குத்தான் செட்டாகும்! அஜித்தை வைத்து புது முயற்சி எடுக்கப் போகும் ஆதிக் – பாக்க முடியுமா?

ஒரு கட்டத்தில் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற நிலைக்கு வந்தார். இருந்தும் அதை பல இடங்களில் காட்டிக்கொள்ளாமலே நகர்ந்து விடுவார். அவரின் வெற்றி அசூர வேகத்தில் சென்றது. பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துவிட்டு வந்தார்.

ராஜ்கிரண், ரேவதியை வைத்து ப.பாண்டி என்ற படத்தினை தனுஷ் இயக்கி இருந்தார். அந்த படத்தில் ராஜ்கிரணின் சின்ன வயது வேடத்தில் தனுஷே நடித்தும் இருந்தார். அப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பல வருடங்கள் கழித்து தனுஷ் மீண்டும் படம் இயக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: நல்லாதானே போச்சு..! ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றியில் மீண்டும் பழைய ரூட்டுக்கே திரும்பும் லாரன்ஸ்.. அலறும் ரசிகர்கள்..!

இப்படத்தில் தனுஷின் உறவினரான வருணை கதாநாயகனாக அறிமுகம் செய்ய இருக்கிறார். வருண் தனுஷின் அக்கா மகன் எனவும் கூறப்படுகிறது. இயக்கி தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் கேமியோ ரோல் செய்ய இருப்பதாக தகவல்கள் கசிந்த நிலையில் தனுஷ் நடிக்கவே இல்லை. டைரக்‌ஷனில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.

ஜிவிபிரகாஷ் இசையமைக்க இருக்கும் இப்படத்தினை கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan