Dhanush: சினிமாவில் தனுஷ் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரு பக்கம் தொடர்ந்து நடிப்பு இன்னொரு பக்கம் இயக்கம் என பன்முகம் காட்டும் தனுஷ் தற்போது மீண்டும் இந்தி திரையுலகில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தில் அவருடன் நாகர்ஜூனா இணைந்துள்ளார். பிச்சைக்காரராக தனுஷ் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தினை முடிக்க இருக்கிறார் தனுஷ்.
இதையும் படிங்க: எப்பா சூரி நீயா இப்படி நடிச்சிருக்கே? படத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை..! பயில்வான் விமர்சனம்
இப்படத்தினை தொடர்ந்து அவர் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கிறாராம். ராயன் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகளையும் தனுஷ் கவனித்து வருகிறார். ஜூன் 13ந் தேதி ரிலீஸ் செய்யப்பட இருந்த ராயன் தள்ளிப்போய் இருக்கிறது.
ஜூலை 26ந் தேதி இப்படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 28ந் தேதி தனுஷ் பிறந்தநாள் என்பதால் ராயன் படத்தின் வெற்றி கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜா படத்திற்கு முன்னர் இன்னொரு படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: பிரேமலு பிரபலத்தை வளைத்து போட்ட குட் பேட் அக்லி டீம்… கூடவே இன்னொரு வில்லன் நடிகரும் வராராம்!…
ஏர் போர்ஸில் நடக்கும் காதல்கதையாக இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ராஞ்சனா, அட்ராங்கி ரே படத்தினை போல இப்படமும் காதலை முழுவதும் மையமாக கொண்டிருக்குமாம். சேகர் என்ற கேரக்டர் பெயரில் தனுஷ் நடிக்க இருக்கிறார். மாரி செல்வராஜ் படத்திற்கு செல்லும் முன்னர் இப்படத்தினையும், இளையராஜாவின் பயோபிக்கையும் முடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…