வெற்றிமாறனை நம்பினால் வேலைக்கு ஆகாது.! நம்ம அந்த பக்கம் போயிடுவோம்.! சோகத்தில் தனுஷ்.!

by Manikandan |
வெற்றிமாறனை நம்பினால் வேலைக்கு ஆகாது.! நம்ம அந்த பக்கம் போயிடுவோம்.! சோகத்தில் தனுஷ்.!
X

வடசென்னை, அசுரன், கர்ணன் என மார்க்கெட் உச்சத்தில் இருந்த தனுஷின் மார்க்கெட் சில மாதங்களாக சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதுவும் கர்ணன் படத்திற்கு பிறகு வெளியான அனைத்து படங்களுமே OTT யில் வெளியானது.

அப்படி வெளியான படங்களும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இறுதியாக வெளியான மாறன் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதனால் உடனடியாக சுதாரித்த தனுஷ், வெற்றிமாறனை தொடர்பு கொண்டு அடுத்து உடனே படம் செய்யலாமா என கேட்டுள்ளாராம்.

ஆனால், வெற்றிமாறனுக்கு இருக்கும் படங்களின் லிஸ்ட் பற்றி தான் நமக்கு தெரியுமே. அவரால் தற்போது அதனை விட்டு வர முடியவில்லை. அதனால், வெற்றிமாறன் தனுஷுக்கு தற்போதைக்கு நோ சொன்னதாக தான் தகவல் வெளியானது.

இதையும் படியுங்களேன் - உன் மூஞ்சிய போட்டா யார் தியேட்டருக்கு வருவாங்க.?! விஜய் சேதுபதியை கழுவி ஊற்றிய தயாரிப்பாளர்.!?

இதனை அடுத்து மீண்டும் காம்பேக் கொடுக்க பெரிய இயக்குனர் பெரிய தயாரிப்பாளர் என களமிறங்க திட்டமிட்ட தனுஷ் தற்போது மீண்டும் தெலுங்கு பக்கம் தலைசாய்த்துள்ளார். அண்மையில், பவன் கல்யணை வைத்து வக்கீல் சாப் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய வேணு ஸ்ரீராம் என்பவரிடம் கதை கேட்டுள்ளாராம்.

அந்த பாடத்தை விஜயின் 66வது படத்தை தயாரித்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளாராம். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்கள் ரிலீசுக்கு ரெடியாக வருகின்றன.

Next Story