தனுஷ் இயக்கத்தில் S.J. சூர்யா.. கூட இந்த நடிகர் வேற இருக்காரா? தெறிக்கவிடும் D50 அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி படங்களை அடுத்து நடிகர் தனுஷ், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

கேப்டன் மில்லர் படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார். செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் பீரியட் படமாக உருவாகிறது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜான் கொக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டர் நாகூரன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள
, த.ராமலிங்கம் கலை இயக்குனராக பணிபுரிய உள்ளார். மாஸ்டர் திலீப் சுப்பராயன், சண்டை காட்சி இயக்கத்தை கவனிக்க உள்ளார், இந்த படத்திற்கு மதன் கார்க்கி வசனம் எழுதுகிறார்.

இதை அடுத்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டர் மூலம் சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இந்த படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் தனுஷ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் துஷாரா விஜயன், மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர். பின்னர் துஷாரா, 'நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ரெனே என்ற நவநாகரீக பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனுஷூக்கு சகோதரர்களாக இருவரும் நடிக்க உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related Articles

Next Story