தனுஷ் தற்போது இந்திய சினிமாவின் டாப் நடிகராக திகழ்கிறார். ஆனால் தனுஷ் தொடக்கத்தில் சினிமாவின் மேல் ஆசையே இல்லாமல் இருந்தாராம்.
கஸ்தூரி ராஜாவின் மகன், மகள்கள் அனைவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். தனுஷின் இரு சகோதரிகளும் மருத்துவர்களாக இருக்கிறார்கள். அதே போல் தனுஷும் சிறப்பாக படிக்கக்கூடிய நபராக இருந்திருக்கிறார். சொல்லப்போனால் தனுஷிற்கு மெரைன் இன்ஜினியராக ஆகவேண்டும் என்பதுதான் விருப்பமாக இருந்ததாம்.
கஸ்தூரி ராஜா மிகப்பெரிய இயக்குனராக திகழ்ந்திருந்தாலும் ஒரு காலகட்டத்தில் அவரது திரைப்படங்கள் சரியாக போகவில்லை. அந்த நிலையில்தான் இளைஞர்களை கவர்வது போல் ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும் என நினைத்தார். அவ்வாறு அவர் தொடங்கிய திரைப்படம்தான் “துள்ளுவதோ இளமை”.
“துள்ளுவதோ இளமை” திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர் உதய் கிரண் என்ற தெலுங்கு நடிகர்தானாம். ஹீரோக்களின் நண்பர்களில் ஒருவராகத்தான் தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் உதய் கிரணால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. அப்போதுதான் கஸ்தூரி ராஜா தனுஷிடம், “நீ இந்த படத்தில் ஹீரோவாக நடி” என கூறியிருக்கிறார்.
அதற்கு தனுஷ், “என்னால் ஹீரோவாக எல்லாம் நடிக்க முடியாது” என திட்டவட்டமாக கூற, அதற்கு கஸ்தூரி ராஜா, “டேய் எனக்கு வேற ஆளே கிடைக்கலைடா. தயவு செஞ்சி இந்த படத்துல ஹீரோவா நடிச்சிக்கொடுடா” என கேட்க, அதன் பிறகுதான் தனுஷ் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின் தனுஷ் இனி தான் நடிக்கவே போவதில்லை என முடிவு செய்திருந்தாராம். எனினும் செல்வராகவன், தனுஷிடம் பேசி “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்தாராம். இவ்வாறு சினிமாவின் மீது விருப்பமே இல்லாமல் இருந்திருக்கிறார் தனுஷ்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…