சொந்த படத்துக்கு டிவிட் போடும் தனுஷ் மனோஜுக்கு இரங்கல் சொல்லலேயே!. பொளக்கும் ரசிகர்கள்!..

#image_title
Manoj Bharathiraja: இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த 25ம் தேதி மாலை தனது வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஏனெனில், மனோஜுக்கு 48 வயதுதான் ஆகிறது. அதோடு, அவர் உடல் நலப்பிரச்சனைகள் இருப்பதாக கூட எந்த செய்தியும் வெளியாகவில்லை.
திடிரென அவர் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தாஜ்மகால் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார் மனோஜ். ஆனால், ஒரு நடிகராக அவரால் சினிமாவில் வெற்றி பெற முடியவில்லை. அவரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து பார்த்தார். ஆனால், கிளிக் ஆகவில்லை.
இத்தனைக்கும் கடல் பூக்கள், ஈர நிலம் போன்ற படங்களில் மனோஜ் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒருகட்டத்தில் கிடைக்கும் வேடங்களில் நடித்தார். இந்நிலையில்தான் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார். 15 நாட்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாரதிராஜா மகன் இறந்துவிட்டார் என்கிற செய்தி வெளியானதும் சூர்யா, கார்த்தி, விஜய், எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்கள் நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டிக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால், தனுஷ் அங்கு செல்லவில்லை. தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் அவரின் தாத்தாவாக பாரதிராஜா நடித்திருந்தார்.
சரி நேரில் போய் அஞ்சலி செலுத்த முடியவில்லை என்றாலும் டிவிட்டரிலாவது இரங்கல் தெரிவித்திருக்கலாம். தனுஷ் அதையும் செய்யவில்லை. இத்தனைக்கும் அவரின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ஒரு மொபைல் ஆப்பில் வெளியாகியுள்ளது. நேற்று அதற்கு புரமோஷன் டிவிட் போட்டார். மேலும், இப்படத்தை பாராட்டி இயக்குனர் வெங்கட்பிரபு போட்ட டிவிட்டுக்கு நன்றி சொல்லி டிவிட் போட்டார். ஆனால், மனோஜ் இறப்பு பற்றி அவர் ஒரு இரங்கலும் தெரிவிக்கவில்லை. இதுவரை நேரிலும் செல்லவில்லை.
85 வயதான கவுண்டமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். ஆனால், தனுஷ் இதுவரை டிவிட் கூட போடவில்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.