தனுஷ், மம்மூட்டி காம்பினேஷனில் உருவாகும் Om… புதிய ரிலீஸ் தேதியை லாக் பண்ணியாச்சு!
'ஓம்' படம் முதலில் அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது.
தனுஷ் நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் தான் ‘ஓம்’. இதில் மலையாள ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டி மிக முக்கிய ரோலில் வலம் வரப்போகிறார்.
‘ரங்கூன், அமரன்’ படங்களின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் டாப் கியரில் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறார், எழில் அரசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
முதலில் படத்தை வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, பின் ஒத்தி வைத்தனர். தற்போது, புதிய ரிலீஸ் தேதியை லாக் பண்ணியுள்ளனர். வருகிற நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகிறதாம்.