என்னங்கடா கத்தியில மண்டை ஓடு சொருகியிருக்கு!.. தனுஷின் 56வது பட இயக்குநர் யாரு தெரியுமா?..

Published On: April 9, 2025
| Posted By : Saranya M

நடிகர் தனுஷ் வரிசையாக பல படங்களில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வரிசையாக புதிய படங்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக ஏற்கனவே ஆரம்பிக்கப்படாத பல படங்கள் லைன் கட்டி உள்ளன.

இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் வேல்ஸ் நிறுவனம் தனுஷின் அடுத்த படத்தை லாக் செய்துள்ளது. அந்த படத்தை கர்ணன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மண்டை ஓடு ஒன்று வீர வாள் மீது சொருகி இருப்பது போன்ற போஸ்டருடன் தனுஷின் 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனுஷ் நடித்த இட்லி கடை படத்தின் படப்பிடிப்புக்கே ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும் தனுஷுக்கு ரெட் கார்டு போட வேண்டும் என ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஒரு பக்கம் பிரச்சனையை கூட்டி வரும் நிலையில், தனுஷ் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இட்லி கடை படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 10க்கு பதில் அக்டோபர் 1 என பல மாதங்கள் தள்ளிப்போயுள்ளன. வாழை படத்தை முடித்த நிலையில், துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கி முடித்துள்ள மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திலும் வாள் வைத்திருக்கும் நிலையில், கர்ணன் 2ம் பாகமா? அல்லது மற்றொரு சாதி படமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.