என் வாழ்வில் அந்த பெண்ணை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய தனுஷ்.!

by Manikandan |   ( Updated:2022-07-19 08:14:18  )
என் வாழ்வில் அந்த பெண்ணை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்.. ஓப்பனாக கூறிய தனுஷ்.!
X

தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக பெயர் எடுத்த நடிகர் தனுஷ் தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என தடம் பதித்து வருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக ஹாலிவுட் திரைப்படமான 'தி கிரே மேன்' ரிலீசாக உள்ளது.

அவர், ஆரம்ப காலகட்டத்தில் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டு தான் தற்போது தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக உருவாகி உள்ளார். இவரது, தேகம் குறித்தும் இவரது ஒல்லியான தோற்றம் குறித்தும் விமர்சனங்கள் இருந்து வருகிறது.

இது குறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் தனுஷ், தனது 'காதல் கொண்டேன்' திரைப்பட சூட்டிங் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அந்த சமயம், ஒரு சோடாபுட்டி கண்ணாடி ஒரு கிழிந்த சட்டை, பேண்ட் அணிந்து ஒரு ஓரமாக நான் உட்கார்ந்து இருந்தேன்.

இதையும் படிங்களேன் - சமந்தாவை அலேக்காக தூக்கி சென்ற பாலிவுட் ஹீரோ.. வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி..,,

அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் யார் இப்பட ஹீரோ என்று கேட்டார், உடனே இன்னொருவர் என்னை கைகாட்டி இவர்தான் அந்த படத்தின் ஹீரோ என்ற கூறவே அவர் பயங்கரமாக சிரித்து கலாய்த்து விட்டாரராம். இதனை அருகில் இருப்பவர்களிடம் கூறி நீயும் ஹீரோ நானும் ஹீரோ என்று கலைக்கு தொடங்கி விட்டார் அந்த நபர். எனக்கு அந்த இடத்தில் என்ன சொல்வது என்று தெரியவில்லை மிகவும் வருத்தப்பட்டு நின்றேன் என்று கூறினார்.

அந்த சமயம், கூட்டத்தில் இருந்து ஒரு பள்ளி மாணவி எனது அருகே வந்து ஒரு நோட் புத்தகத்தை நீட்டி அதில் கையெழுத்திடுமாறு கூறினார். மேலும், நான் உங்கள் 'துள்ளுவதோ இளமை' திரைப்படம் பார்த்து உள்ளேன் அதில் நீங்கள் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டி பேசினார். தனக்கு கிடைத்த முதல் பெண் ரசிகை இவர்தான். அந்தப் பெண்ணை நான் இதனால் வரையில் மறக்கவே மாட்டேன் என்று மிகவும் உணர்ச்சி பூர்வமாக பேசினார் நடிகர் தனுஷ்.

Next Story