---Advertisement---

Dhanush: D54 to D68.. 2030 வரை தலைவனுக்கு டேட் இல்ல போல.. அசர வைத்த அசுரன்

Published on: February 13, 2026
---Advertisement---

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் இப்போது தன்னுடைய கால்ஷீட்டை மிகவும் பிஸியாக வைத்திருக்கும் நடிகர் தனுஷ். கிட்டத்தட்ட தன்னுடைய லைன் அப்பில் 10 படங்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் 2030 வரை தனுஷை எந்த இயக்குனராலும் நெருங்க முடியாத வகையில் கால்ஷீட்டை ஃபில் செய்து வைத்துள்ளார்.

யாரெல்லாம் தனுஷை அடுத்தடுத்து இயக்க போகிறார்கள் என்பது உட்பட இப்போது வெளியாகியுள்ளது. ஆனால் ரசிகர்களின் பொதுவான மன நிலை என்னவெனில் அசுரன் திரைப்படத்திற்கு பிறகு ஒரு மகத்தான வெற்றியை தனுஷால் கொடுக்க முடியவில்லை என்பதுதான். தனுஷ் கெரியரை தூக்கி நிறுத்திய படமாகவும் அசுரன் திரைப்படம் அமைந்தது. அதனால் மீண்டும் பெரிய வெற்றியை எப்போது தனுஷ் கொடுப்பார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

கடைசியாக தனுஷ் நடிப்பில் இட்லி கடை படம் வெளியானது. அது சுமாரான வரவேற்பை பெற்றது. அதற்கு அடுத்த படியாக தனுஷ் கர என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 54வது திரைப்படமாகும். இந்தப் படத்தை போர்த்தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜா இயக்கி வருகிறார். அதற்கு அடுத்தபடியாக தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

ராஜ்குமார் பெரியசாமியை தொடர்ந்து மாரிசெல்வராஜ் தனுஷின் 56வது படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு பீரியட்டிக் படமாக உருவாக இருக்கிறது. 57வது படத்தை எச்.வினோத் இயக்குகிறார். 58வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். 59வது படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார். இந்தப் படம்தான் இளையராஜின் பயோபிக்காக வரவிருக்கிறது.

தனுஷின் 60வது படம்தான் எல்லாரும் எதிர்பார்க்கும் புதுப்பேட்டை 2. செல்வராகவன் இயக்குகிறார். ஆனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முழுவதுமாக முடிந்துவிட்டதாக செல்வராகவன் கூரியுள்ளார். இதை தொடர்ந்து அப்துல் கலாம் பயோபிக்கிலும் தனுஷ் நடிக்கிறார். இது அவருக்கு 61வது படமாக இருக்கும். 62வது படத்தை ஒளிப்பதிவாளர் ஒம் பிரகாஷுடன் ஆரம்பிக்க இருக்கிறார்.

அடுத்துதான் ரசிகர்களின் விருப்பமான கூட்டணியாக வெற்றிமாறனுடன் இணைகிறார். வடசென்னை 2 திரைப்படம் தனுஷின் 62வது படமாக இருக்க போகிறது. இப்படி ராம்குமார், எலன், நெல்சன், வெங்கி அட்லூரி, சிதம்பரம் என வரிசையாக தனுஷுன் லைன் அப் நிரம்பி வழிகிறது.