More
Categories: Cinema News latest news

ஏ.ஆர். ரஹ்மான் பாட்டா இது?.. எல்லாமே டபுள் மீனிங்கா கேட்குதே!.. எல்லாம் தனுஷ் பார்த்த வேலையா?..

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் ’வாட்டர் பாக்கெட்’ சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ப. பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியானது. பல மாதங்கள் ஆகியும் இன்னமும் ஓடிடியில் கூட விற்பனை ஆக முடியாத அளவுக்கு அந்தப் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பா ரஜினிகாந்தை வைத்து செதுக்கி இருந்தார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: என்றும் இளமையாக இருக்க ராமராஜனுக்கு நம்பியார் கொடுத்த அட்வைஸ்! இதுதான் காரணமா?

தனுஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க மாட்டேன் என மறுத்த நிலையில், தனுஷ் தான் இயக்கி நடித்து வரும் படத்தில் தன்னுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் என பெரும் கூட்டத்தையே வைத்து படத்தை உருவாக்கியுள்ளார்.

ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் வெறித்தனமாக ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில், வாட்டர் பாக்கெட் எனும் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஜோடிக்கான பாடலாக இந்த உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: அண்ணன் என்ன வாடிவாசல் பண்றது!.. நான் பண்றேன் பாருங்க!.. கார்த்தியின் தில்லை பார்த்தீங்களா!..

ஏ.ஆர். ரகுமான் இசையில் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ள இந்த பாடலுக்கு கானா காதர் வரிகளை எழுதியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் இடம்பெற்ற “கோயிந்தம்மா” பாடலைப் போல இந்த பாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடுவதால் இந்த பாடல் ஏ.ஆர். ரகுமான் பாடல் போன்றே தெரியவில்லை. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல் போலவே உள்ளது.

மேலும், பாடல் முழுக்க டபுள் மீனிங் லிரிக்ஸ் அதிகம் எட்டிப் பார்க்கிறது. “வாயில போடவா”, ”காஞ்ச மிளகா”, ”உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது” என பாடல் முழுக்கவே இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்து கிடக்கின்றன. “வாட்டர் பாக்கெட்” என்கிற பாடலின் டைட்டிலே டபுள் மீனிங் போலத்தான் தெரிகிறது. தனுஷ் தான் இயக்குநர் என்பதால் அவர் தான் இப்படியொரு பாடல் வேண்டும் என உருவாக்கி உள்ளாரா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அபர்ணா பாலமுரளி சந்திப் கிஷன் பின்னாடி தட்டுவது, சந்தீப் பதிலுக்கு அபர்ணா பாலமுரளி பின்னாடி தட்டுவது என காட்சிகளும் மோசமாக உள்ளன.

இதையும் படிங்க: நைட்டு 12 மணிக்கு இயக்குனரின் வீட்டுக்கு போய் வாய்ப்பு கேட்ட அஜித்!. இவரா இப்போ இப்படி மாறிட்டாரு!.

Published by
Saranya M

Recent Posts