தனுஷ் தவறவிட்ட ஷங்கர் திரைப்படம்… பின்னாளில் சூப்பர் ஹிட் ஆன தரமான சம்பவம்…
ஒரு நடிகர் இயக்குனர்களிடம் கதை கேட்கும் விஷயத்தில் மிகவும் உஷாராக இருப்பார். தனக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் அதனை அந்த நடிகர் நிராகரிப்பது எப்போதும் நடப்பதுதான். ஆனால் அவ்வாறு நிராகரித்த கதைகள் வேறு ஒரு நடிகருக்குச் சென்று, திரைப்படமாக உருவாகி மாஸ் ஹிட் ஆவதும் உண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் தனுஷிற்கும் நடந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் தனது “எஸ் பிக்சர்ஸ்” நிறுவனத்தின் கீழ் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அத்திரைப்படத்தை பாலாஜி சக்திவேல் இயக்குவதாக முடிவு செயப்பட்டது.
இதனை தொடர்ந்து அத்திரைப்படத்தின் கதையை தனுஷிடம் கூறியுள்ளார் பாலாஜி சக்திவேல். தனுஷ் நடித்த “காதல் கொண்டேன்” திரைப்படம் அதற்கு முந்தைய வருடம்தான் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில்தான் பாலாஜி சக்திவேல் அவரின் கதையை தனுஷிடம் கூறியுள்ளார். ஆனால் தனுஷ் “கிளைமேக்ஸ் சரியில்லை” என்று கூறி அந்த கதையை நிராகரித்துவிட்டாராம்.
இதையும் படிங்க: “இரண்டு இன்டெர்வல் கொண்ட ரஜினி திரைப்படம்…” கமல்ஹாசன் கொடுத்த ஃப்ரீ அட்வைஸ்… “படையப்பா” குறித்த சுவாரசிய தகவல்கள்…
அதன் பின் அத்திரைப்படத்தில் “பாய்ஸ்” மணிகண்டன் நடிப்பதாக இருந்தது. மணிகண்டனை வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்தபோது கதாநாயகிக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லையாம்.
அதன் பிறகுதான் அந்த கதையில் நடிகர் பரத் ஒப்பந்தமானார். அந்த திரைப்படத்தின் பெயர்தான் “காதல்”. கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான “காதல்” திரைப்படம் பரத்தின் சினிமா கேரியரிலேயே திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.