Connect with us
dhanush

Cinema News

நைட் 10 மணிக்கு போன் பண்ணி டார்ச்சர்! பிரபல நடிகையிடம் இருந்து அமீரை காப்பாற்றிய தனுஷ்!

Director Ameer: பாலாவிடம்  உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் அறிமுகத்தை பதிவு செய்தார் அமீர். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்னு சொல்வாங்க. அந்த வகையில் தன் குருவை மிஞ்சிய சிஷ்யனாக கோலிவுட்டில் அமீர் பார்க்கப்பட்டார்.

கிராமத்து மண்வாசனை ததும்ப கொலை,கொள்ளை என வெறித்தனமான சம்பவங்களை வைத்து படம் எடுப்பதில் அமீரும் ஒரு வகையில் கைதேர்ந்த இயக்குனர்தான். முதல் படத்தில் காதலை ததும்ப ததும்ப காட்டி தனது இரண்டாவது படமான ராம் படத்தில் கதிகலங்க வைத்திருப்பார்.

இதையும் படிங்க: குருவை ரிஜெக்ட் செய்த தயாரிப்பாளர்… நைசா பேசி கரெக்ட் பண்ணிய ஷங்கர்…

இந்தப் படம் தான் ஒட்டுமொத்த  திரையுலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக அறியப்பட்டார். பருத்திவீரன் படம் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த நிலையில் அமீர் ஒரு மேடையில் தனக்கு ஆங்கிலம் தெரியாததால் தான் பட்ட வேதனையை பற்றி ஒரு சம்பவத்தை கூறினார். நைட் 10 மணி அளவில் ஒரு முன்னணி பெரிய நடிகை அமீருக்கு போன் செய்தாராம். நல்ல தூக்கத்தில் இருந்த அமீருக்கு அந்த நடிகை முழுவதும் ஆங்கிலத்தில் பேச இவருக்கு அது புரியாமல் கால் யூ லேட்டர் என்று சொல்லி கட் செய்துவிட்டாராம்.

இதையும் படிங்க: படமே ஓடலைன்னாலும் பந்தா பண்ணும் பூஜா ஹெக்டே!.. ஆத்தாடி இத்தனை கோடிக்கு புது கார் வாங்கியிருக்காரா?..

அதன் பிறகு படப்பிடிப்பிற்காக விமான நிலையத்திற்கு சென்ற அமீர் விமானத்தில் போய் அமர்ந்திருக்கிறார். அதே விமானத்தில் தனுஷும் உடன் ஒரு நடிகையும் இருந்தார்களாம். அந்த நடிகையை பார்த்ததுமே அமீர் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்து விட்டாராம்.

ஆனால் தனுஷ் அமீரை பார்த்து எழுந்து வந்து பேசினாராம். அதற்கு அந்த நடிகை தனுஷிடம் யார் என கேட்டிருப்பார் போல. அதற்கு முன் தாடி மீசையுடன் இருந்ததனால் இதுதான அமீர் என அந்த நடிகைக்கு தெரியவில்லையாம். தனுஷ் சொன்ன பிறகுதான் தெரிந்திருக்கிறது.

இதையும் படிங்க: சண்டையா? அஜித்துக்கும் தனக்கும் இருக்கிற bonding பற்றி வாய்திறந்த பிரசாந்த் – இவங்கள போய் இப்படி நினைச்சிட்டோமே

உடனே அந்த நடிகை டென்ஷனில் கத்த அன்றைக்கு போன் பண்ணால் பேசமுடியாதுனு கட் பண்ணிவிட்டார் என சொல்லி அமீரிடம் மல்லுக்கு நின்றிருக்கிறார். அதன் பிறகுதான் அமீருக்கு ஆங்கிலம் தெரியாது என்ற உண்மையை தனுஷ் அந்த நடிகையிடம் சொல்லி நிலைமையை புரியவைத்திருக்கிறார். இதை அந்த மேடையில் அமீர் கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top