இதுக்குகூடவா போஸ்டர் விடுவீங்க.!? ரெம்ப சோதிக்காதீங்க.! தனுஷை கெஞ்சும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் கூட்டணிகளில் ஒன்று தனுஷ் - செல்வராகவன் கூட்டணி. இவர்கள் கூட்டணியில் வெளியான, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய மூன்று திரைப்படங்களும் ரசிகர்களின் எப்போதும் விருப்பமான பட்டியலில் இருக்கும். அந்த அளவுக்கு இருவரும் இணைந்தால் தரமான திரைப்படங்கள் ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவர்கள் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் அவ்வப்போது கிடைக்கும் நேரங்களின் படமாக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்களேன் - ஹாலிவுட்டையே மிரளவைத்தவர்டா நம்ம Mr.பிரமாண்டம் ஷங்கர்.!
தனுஷ் அடுத்தடுத்து, ஹிந்தி, தெலுங்கு, ஹாலிவுட் எனபல படங்கள் நடித்து வருவதால் கிடைக்கும் சில சில குறுகிய நாட்களில் நானே வருவேன் பட சூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.
படத்தின் சூட்டிங் எப்போது முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதில் படத்தின் சூட்டிங் எப்போது ஆரம்பித்தாலும் ஒரு புதிய போஸ்டர் வெளியிட்டு படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது என்று செல்வராகவன் ட்வீட் செய்து வருகிறார்.
அதேபோல தற்போதும் நானே வருவேன் படக்குழுவில் இருந்து ஒரு போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் தனுஷ் செல்வராகவன் இருக்கின்றனர் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக வேறு ஏதேனும் ஒரு பாடல் வெளியாக உள்ளது, படத்தின் டீசர் வீடியோ வெளியாக உள்ளது, என்று வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் சூட்டிங் ஆரம்பிக்க போகிறது என்பதை கூட ஒரு அப்டேட் ஆக வெளியிட்டு ரசிகர்களின் பொறுமையை படக்குழு சோதித்து வருகிறது.