என்ன மனுஷன்யா தனுஷ்!.. மனைவி படத்துக்கு திடீர்னு இப்படியொரு ட்வீட் போட்டு அசத்திட்டாரே!..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, செந்தில், அனந்திகா, தம்பி ராமைய்யா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கபில் தேவ் என பலர் நடிப்பில் உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ரிலீஸ் ஆக போகிறது.
அதை முன்னிட்டு நேற்று ரொம்பவே தாமதமாக ரஜினி ரசிகர்களே கடுப்பாகி தூங்க சென்ற நேரத்தில் ஒருவழியாக டிரெய்லர் வெளியானது. இந்நிலையில், திடீரென ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் தனுஷ் வாழ்த்து சொல்லி ட்வீட் ஒன்றை போட்டு திக்குமுக்காட செய்துள்ளார்.
இதையும் படிங்க: வருஷத்துல எனக்கு இப்படி ஒரு பாட்டு கிடைச்சா போதும்யா!.. எஸ்.பி.பி.யை நெகிழ வைத்த பாடல் எது தெரியுமா?
கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜனவரி 17ம் தேதி திடீரென தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் பிரியப் போவதாக அறிவிப்பு வெளியானது ரசிகர்களை ஷாக் ஆக்கியது.
17 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, 2 ஆண் குழந்தைகளை பெற்று வளர்த்த நிலையில், திடீரென இருவரும் பிரிய காரணமே ஐஸ்வர்யாவுக்கு இயக்கத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் தான் என காரணங்கள் வெளியாகின.
இதையும் படிங்க: மீரா மிதுன் தங்கச்சி மாதிரியே இருக்க!.. பிக் பாஸ் ஜோவிகாவை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!..
அதே போல கடந்த 2 ஆண்டுகளாக லால் சலாம் படத்தை செதுக்கி வந்தவர் தற்போது படத்தின் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டார். கேப்டன் மில்லர் படத்துடன் போட்டி போடாமல் படத்தை ஐஸ்வர்யா ஒரு பக்கம் தள்ளி வைப்பதும், லால் சலாம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் என நேற்று வெளியான டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிடுவதும் என இருவரும் அன்பை மாறி மாறி பொழிந்து வருகின்றனர்.
லால் சலாம் வெற்றிக்குப் பிறகு இருவரும் குழந்தைகளுக்காகவாவது இணைந்து விட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனுஷின் வாழ்த்துக்கு ரஜினி ரசிகர்கள் நன்றி கூறி வருகின்றனர்.