தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் தனுஷ் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதையடுத்து, சுமார் 18 வருட திருமண வாழ்வை முறித்து கொள்வதாக கடந்த ஜனவரி தனித்தனியே அறிவித்து விட்டனர். இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் என்னவாக போகிறது ? சூப்பர் ஸ்டார் ரஜினியின் மன நிலைமை எப்படி இருக்குமோ? என பலரும் வருத்தப்பட்டனர்.
அதன்பிறகு, எதைப்பற்றியும் யோசிக்காமல் தனுஷ் தனது படங்களில் நடிப்பதும், ஐஸ்வர்யா உடற்பயிற்சி செய்து தன்னுடைய படங்களின் வேலைகளிலும் மும்மரமாக ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படியுங்களேன்- அஜித் பாட்டு போட்டு நடந்த தனுஷ் பட ஷூட்டிங்.. அதுவும் செம ரொமான்ஸ் காட்சியாம்.. உளறிய இளம் நடிகை..
அவ்வப்போது, நேரம் கிடைக்கும் போது, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனது மகன்களுடன் நேரத்தை செலவு செய்து வருகிறார்கள். இருவரும் மீண்டும் இணைந்து வாழ்வார்களா..? என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு ஐஸ்வர்யா தனக்கு சிறிது காலஅவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…