தமிழ் சினிமாவின் ஹாலிவுட் நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பெருமை சேர்க்கும் நாயகனாக வளர்ந்து கொண்டு இருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் அடுத்ததாக தெலுங்கிலும் காலடி எடுத்து வைப்பதாக தெரிகிறது. ஒட்டு மொத்த தமிழ் கலையுலகிற்கு பெருமை சேர்க்கும் மனிதனாக திகழ்ந்து வருகிறார் நடிகர் தனுஷ்.
இவரது நடிப்பில் நேற்று வெளியான திருச்சிற்றம்பலம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை இயக்குனர் மித்ரன் இயக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.படத்தில் மூன்று ஹீரோயின்கள்.
நித்ய மேனன், ராஷிக்கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கொடுத்த தங்கள் கதாபாத்திரங்களை நல்ல படியாக செய்து முடித்திருக்கின்றனர். மேலும் படத்திலுள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தை பார்த்து வெளியே வந்த ரசிகர்களும் படத்தை பற்றி புகழ்ந்து தள்ளினர். நீண்ட நாள்களுக்கு பிறகு இப்படி ஒரு கதையில் தனுஷை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறி வருகின்றனர். மேலும் படத்தின் இயக்குனர் மித்ரனிடம் படத்தை பார்த்து தனுஷ் love you-னு மெசேஜ் பண்ணியிருக்கிறார்.இதை மித்ரனே நிரூபர்களிடம் மிகவும் வெட்கப்பட்டு கூறினார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…