Cinema News
இளையராஜாவின் பயோபிக்கை இயக்குவது யார்?!.. தனுஷ் கொடுத்த அதிர்ச்சி!.. இதெல்லாம் நியாயமே இல்ல!..
தமிழ் சினிமாவின் இசை உலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. 70களின் இறுதியில் அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர். இவரின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. 80களில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக இருந்தார்.
இவரை நம்பியே பல திரைப்படங்களும் உருவானது. இளையராஜாவை புக் செய்த பின்னர்தான் படத்தையே துவங்கினார்கள். ஏனெனில், அவரின் இசையே படத்தை ஓடவைக்கும் என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நம்பினார்கள். அவர்கள் நினைத்தபடியே பல திரைப்படங்களை தனது இசையால் பல படங்களை ராஜா ஓட வைத்தார்.
இதையும் படிங்க: முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? எந்த நடிகைக்கும் கிடைக்காத ஒன்னு
தனது பின்னணி இசையால் பல காட்சிகளுக்கும் உயிர் கொடுத்தார். இளையராஜாவின் கதையை சினிமாவாகவே எடுக்கலாம். ஏனெனில், படிப்படியாக அவர் முன்னேறியது, சினிமா உலகினரிடமும் அவருக்கு இருந்த நட்புகள், இயக்குனர்களிடம், நடிகர்களிடமும் அவர் போட்ட சண்டைகள், வைரமுத்து, பாலச்சந்தர், மணிரத்னம் போன்ற பலரையும் அவர் பிரிந்தது.. அவருக்கு போட்டியாக ஏ.ஆர்.ரஹ்மான் வந்தது என முக்கிய சம்பவங்கள் அவரின் வாழ்வில் இருக்கிறது.
இளையராஜாவின் வாழ்க்கையை படமாக எடுக்கும் ஆசை சிலருக்கு இருக்கிறது. பல இயக்குனர்களே அவரின் தீவிர ரசிகர்களாகத்தான் இப்போதும் இருக்கிறார்கள். அதில் பால்கி என அழைக்கப்டும் பாலகிருஷ்ணாவும் ஒருவர். இவர் ஹிந்தியில் சீனி கம், பா, ஷமிதாப் உள்ளிட்ட சில படங்களை இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.
இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால், அது நடக்காமல் போனது. ஆனால், தனுஷுக்கு அந்த ஆசை அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு தீவிர இளையராஜா ரசிகர். எனவே, அவரே இயக்குனர்களை முடிவு செய்ய முடிவெடுத்துவிட்டார்.
மாரி செல்வராஜும், கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆகியோர் அவரின் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் இருவரையும் இளையராஜாவிடம் அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரிடம் இளையராஜாவும் பேசியிருக்கிறார். மாரி செல்வராஜ் என்றால் கூட அது சிறப்பாக வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால், வெட்டு, குத்து, துப்பாக்கி என படங்களை எடுக்கும் அருண் மாதேஸ்வரன் இளையராஜாவின் பயோபிக்கை எடுத்தால் அது எப்படி வரும் என கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.