என்னா இருந்தாலும் மாமனார் பாசம் போகல…தனுஷ் செஞ்ச வேலைய பாருங்க!…

Published on: August 22, 2022
---Advertisement---

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் படத்தினை தயாரிக்கிறது. இப்படத்தின் சூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகிறது.

jailer

அதனை முன்னிட்டு இப்படத்தின் ரஜினி இருக்கும் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது. அதனை பலரும் பார்த்து வெகுவாக பாராட்டி இருந்தனர். இன்றைய டாப் ட்ரெண்டிங் ரஜினி தான்.

வழக்கமாக ரஜினி படத்திற்கு தனுஷ் வாழ்த்து தெரிவித்து விடுவார். ஏனென்றால் ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் தனுஷ். ரஜினி படம் வந்தால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் வழக்கம் உள்ளவர். அதேபோல் ரஜினி பட போஸ்டர், டிரைலர் என அனைத்தையும் தனது twitter பக்கத்தில் பகிர்ந்து வருவார்.

இதையும் படியுங்களேன் – கைவசம் நிறைய தொழில் வச்சிருக்கீங்களே சார்.? சூர்யாவின் புது புது பிசினஸ் சீக்ரெட் லிஸ்ட் இதோ….

danush

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவைத்தான் தனுஷ் திருமணம் முடித்து இருந்தார். இவர்கள் இருவரும் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அண்மையில் தான் இவர்கள் இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக தனித்தனியே அறிவித்து விட்டனர். ஆதலால் ஜெயிலர் படத்திற்கு வாழ்த்து கூறுவாரா தனுஷ் என எதிர்பார்த்த நிலையில்,

யாரும் எதிர்பார்காதபோது, ஜெயிலர் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நன்றாக இருக்கிறது என ஆங்கிலத்தில் பதிவிட்டு உள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன இருந்தாலும் மாமனாரை தனுஷ் விட்டு கொடுக்கவில்லை என சிலாகித்து வருகின்றனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.