தனுஷா? சிம்புவா? விஷாலா? அதர்வாவா? என்ன இழுத்துக்கிட்டு எல்லாருக்குமே ரெட் கார்டு தான்!

Red card: தமிழ்சினிமாவில் இளம் நாயகர்கள் செய்யும் சேட்டையால் பல தயாரிப்பாளர்கள் கடுப்பில் தான் இருக்கின்றனர். அதனால் தொடர்ச்சியாக எக்கசக்கமாக சங்கத்தில் புகாரை கொடுத்து கொதித்துவிட்டனர். உடனே முடிவெடுக்கப்படும் என சங்க தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.

கோலிவுட் டாப் நாயகர்கள் எல்லாம் தங்கள் வேலையை சரியாக செய்து கொண்டு இருக்கின்றனர். ரஜினி, கமல் என வயதில் மூத்த நடிகர்கள் எல்லாம் உயிரை கொடுத்து நடித்து வரும் நிலையில், இளம் நாயகர்களின் அட்ராசிட்டி தான் தற்போது கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ஆதிகுணசேகரனை அடக்கி வாசினு சொன்னா அடுக்குமா? மாரிமுத்து நடிக்க இருந்த மற்றுமொரு சீரியல் எதுனு தெரியுமா?

இந்த புகார்கள் குறித்து சமீபத்தில் சங்க தரப்பில் விவாதிக்கப்பட்டது. அதில் அதிக புகார்கள் வந்திருக்கும் சில முன்னணி நாயகர்களுக்கு உடனே ரெட் கார்ட் கொடுக்க முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிலும், இந்த லிஸ்ட்டில் சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா உள்ளிட்ட டாப் நடிகர்கள் பெயர்கள் இருப்பது தான் கோலிவுட்டையே பதற வைத்துஇருக்கிறது. ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என தீவிரமாக உழைத்து கொண்டு இருக்கும் விஷாலுக்கு ரெட் கார்டு தரப்பட இருக்கிறது.

தயாரிப்பாளர் சங்க நிதியை சரியாக பயன்படுத்தாதது, வாங்கிய கடன்களை கொடுக்காத காரணத்தால் விஷாலுக்கு இந்த ரெட் கார்டு எனக் கூறப்படுகிறது. இந்த லிஸ்ட்டில் புது வரவு தனுஷ் தான். சமீபகாலமாக தனுஷ் சரியாக ஷூட்டிங் வருவது இல்லை. வந்தாலும் கண்ட நேரத்தில் ஆள் எஸ்கேப் ஆகிவிடுகிறார் உள்ளிட்ட புகாரின் பேரில் தனுஷ் மீதும் ரெட் கார்டு கொடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: என்னப்பா அப்டேட்னு விளையாடிக்கிட்டு இருக்கீங்க… விடாமுயற்சியை விட்டு தொலைங்கையா… காண்டான ரசிகர்கள்!

பழைய கதையாக சிம்பு மீது இருக்கும் பழைய புகாரின் அடிப்படையில் தான் ரெட் கார்டு கொடுக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே சில காலம் ரெட் கார்டு போடப்பட்ட நிலையில், ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் அதர்வாவும் சில தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்கி விட்டு சரியாக படப்பிடிப்புக்கு போகாத நிலையில் அவருக்கும் ரெட் கார்டு தரப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த செய்தியால் கோலிவுட்டே கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it