Categories: latest news

தனுஷ், சிம்பு, விஷாலுக்கு மீண்டும் வச்ச ஆப்பு?!.. எங்க போய் முடியப்போகுதோ!…

மீண்டும் தமிழ் சினிமாவில் ரெட் கார்ட் பிரச்சனை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

சினிமாவை பொருத்தவரையில் ஒரு நடிகர் கமிட்மெண்ட் கொடுத்துவிட்டு சரியாக படத்தில் நடிக்கவில்லை என்றாலோ அல்லது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் ஒத்துப் போகவில்லை என்றாலோ அவர்கள் மீது தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளிக்கும் வழக்கம் இருக்கின்றது. இதனை விசாரிக்கும் சங்கத்தின் உறுப்பினர்கள் புகார் கொடுக்கப்பட்ட நடிகர்களுக்கு சினிமாவில் ரெட் கார்ட் கொடுப்பார்கள்.

இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்! உசுரே!.. மனைவிக்காக உருகி பாட்டு பாடிய ஏ.ஆர் ரகுமான்?!… வைரலாகும் வீடியோ!…

இது காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் தான். இதில் அதிக அளவில் சிக்கியது யார் என்றால் சிம்பு, விஷால் அதற்கு அடுத்த வரிசையில் தனுஷ் ஆகியோரை கூறலாம். சமீப நாட்களாக ஓய்ந்து இருந்த ரெட் கார்ட் பிரச்சினை தற்போது மீண்டும் பூதாகரமாக வெடித்து இருக்கின்றது. இதனால் நடிகர் சிம்பு, விஷால், தனுஷ் ஆகியோர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

தனுஷ் தற்போது இட்லி கடை என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதை முடித்துவிட்டு மதுரை அன்பு தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இட்லி கடை திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

பைவ் ஸ்டார் கதிரேசனின் புகாருக்கு பதில் அளிக்காமல் தனுஷ் எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என்று மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளதாம். அதேபோல் சிம்பு தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் உடன் இணைந்து தக் லைப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கக் கூடாது என்று கூறி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா குமாரு திரைப்படத்தில் நடிக்காமல் வேறு படத்தில் நடிக்க கூடாது என்று பிரச்சனை எழுந்த நிலையில் அதே பஞ்சாயத்து தான் தற்போது மீண்டும் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் போது அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்து விட்டார் என்று கூறி அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: எங்கேயோ இடிக்குதே!.. ரஹ்மானின் கிதார் இசைக்கலைஞர் அறிவித்த விவாகரத்து?!… அதுவும் எப்ப தெரியுமா?!..

அதற்கு சரியான பதிலை நடிகர் விஷால் கூறும் வரையில் எந்த திரைப்படத்திலும் நடிக்க கூடாது என்று கூறி அவருக்கும் மீண்டும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆக மொத்தம் நடிகர் தனுஷ், சிம்பு, விஷால் மூன்று பேரும் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் இந்த பிரச்சனைகளை எல்லாம் முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ramya suresh

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago