ஒரு டைம் வாங்குன பல்பே போதும்… இயக்குனருக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்…

Dhanush: இயக்கம் ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என பிஸியாக வலம் வரும் தனுஷ் தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனருக்கு முக்கியமான கண்டிஷனை போட்டு ஆஃப் செய்து விட்டாராம். இது ரசிகர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தான் இருக்கும்.
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களும் நடித்திருப்பார்கள். படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க: லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
இப்படத்தின் ஷூட்டிங் சமயத்தின் போது காட்சிகள் அதிகம் மிச்சம் இருப்பதால் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் பாகத்தின் ஆதரவை அடுத்தே அதற்கான வேலைகளில் படக்குழு இறங்கும் எனக் கூறப்பட்டது. அந்த ஆசையை உடைக்கும்படி முதல் பாகம் மண்ணை கவ்வியது.
இதனால் அருண் மாதேஸ்வரனிடம் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் இரண்டாம் பாகம் வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். இதை தொடர்ந்தே, இளையராஜா பயோபிக்கில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறாராம். அதற்குண்டான வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டதாம்.
இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்
இளையராஜா, கனெக்ட் மீடியா இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். மேலும் படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இப்படத்தில் தனுஷுடன் மேலும் ஒரு முக்கிய பிரபலமும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
பயோபிக்கை அருண் மாதேஸ்வரன் எப்படி இயக்க போகிறார் என ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.