More
Categories: Cinema News latest news

டைரக்‌ஷனுக்கு குட்பை சொன்ன செல்வராகவன்…! தம்பி சொல்லிட்டாராம்..மீற மாட்டாராம்…

தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் செல்வராகவன். இவர் முதன் முதலில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்தார். மேலும் தம்பி தனுஷை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். மீண்டும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தை முதன் முதலில் இயக்கினார்.

Advertising
Advertising

இந்த படம் பெருமளவு வெற்றியடைந்தது. தனுஷை ஒரு நடிகராக காட்டியது இந்த படத்தின் மூலம் தான். அதனால் தான் அந்த நன்றியை மறக்காமல் தனுஷ் இன்றளவும் செல்வராகவனை பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருப்பார். செல்வராகவன் காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு அதில் நாயகியாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களுக்குள் உண்டான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தன்னுடன் பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இந்த நிலையில் செல்வராகவன் பெரும்பாலான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட், சாணிக்காயிதம் போன்ற படங்களில் இவரின் நடிப்பு பெருமையாக பேசப்பட்டது.

இவரின் நடிப்பை பார்த்து ஏராளமான படவாய்ப்புகள் வருகின்றன. ஆனால் இவர் இப்பொழுது நானே வருவேன் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள அனைவரும் டைரக்‌ஷனை விட்டுவிட்டு நடிக்க சொல்கிறார்களாம். யார் சொல்லியும் கேட்காத செல்வராகவன் தனுஷ் வந்து சொன்னாராம். பேசாமல் நடிப்பில் கவனம் செலுத்து என்று சொன்னதும் சரி என்று சொல்லி விட்டாராம். இப்போது செல்வராகவனும் மனைவி அஞ்சலியும் சேர்ந்து கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார்களாம்.

Published by
Rohini

Recent Posts