Categories: latest news

என் அப்பாவின் வற்புறுத்தலால் தான் இது நடந்தது…. நடிகர் தனுஷ் ஓப்பன் டாக்…!

இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் டாப் நடிகர்களாக வலம் வரும் அனைத்து நடிகர்களும் தமிழ் சினிமாவில் கடந்து வந்த பாதை அவ்வளவு ஈஸியாக இருந்துவிடவில்லை. பல போராட்டங்கள் அவமானங்கள் நிராகரிப்புகள் என அனைத்தையும் தாண்டியே தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் தனுஷ் கொஞ்சம் அதிகமாகவே விமர்சனங்களை சந்தித்துள்ளார். காரணம் அவரின் உடல் தோற்றம் தான். இந்த ஒல்லி பாச்சான் தான் ஹீரோவா என்றெல்லாம் பலர் தனுஷ் நடிக்க வந்த ஆரம்பகாலத்தில் அவரை பயங்கரமாக கலாய்த்துள்ளனர். தனுஷ் நடிக்க வந்தபோது அவருக்கு வெறும் 17 வயது தான்.

dhanush

பல கேலி மற்றும் கிண்டல்களை சந்தித்த தனுஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் லெவலுக்கு சென்றுவிட்டார். இந்த அளவு சாதனை படைக்க அவரின் திறமை மட்டுமே காரணம். தன்னை கேலி செய்தவர்களுக்கு மத்தியில் இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்று தன்னை ஒரு சிறந்த நடிகன் என தனுஷ் நிருபித்துள்ளார்.

நடிகர் மட்டுமின்றி பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கும் தனுஷ் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

dhanush-kasturi raja

அதில் தனுஷ் கூறியிருப்பதாவது, “நான் நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தேன். ஆனால் என் அப்பா தான் தன்னை ஒரு நடிகனாக்க ஆசைப்பட்டார். என் உடல் வாகிற்கு நடிப்பு சுத்தமாக செட்டாகாது என கூறினேன். ஆனால் என் அப்பா தொடர்ந்து என்னை வற்புறுத்தினார்.

மேலும் எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் என்பதை கண்டுபிடித்து அவர் தான் என்னை நடிக்க வைத்தார். தற்போது அவரால் தான் நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்” என மிகவும் பெருமையாக பேசியுள்ளார்.

Published by
ராம் சுதன்