நான் உலகத்துல நம்புறது அவர மட்டும்தான்!.. மத்த எல்லோரும் என்ன ஏமாத்திட்டாங்க! – புலம்பும் தனுஷ்..
தமிழ் சினிமாவில் முக்கியமான நட்சத்திரமாக தனுஷ் இருந்து வருகிறார். ஆரம்பக்கட்டத்தில் அவர் நடித்த படங்கள் ஆவரெஜ் அளவிலான வசூல்களே கொடுத்தன என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் தனுஷ்.
ஹாலிவுட் வரை சென்று நடித்து வந்துவிட்டார் தனுஷ். தற்சமயம் அவர் நடித்த வாத்தி திரைப்படம் வெளியானது. மக்கள் மத்தியில் வாத்தி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழை காட்டிலும் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு தனுஷ் உதவிப்புரிந்துள்ளார். தமிழ் சினிமாவில் பலருக்கும் பல உதவிகளை செய்துள்ள போதும் தனுஷ் பல சமயங்களில் ஏமாற்றங்களை கண்டுள்ளார். அதை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
சிவகாத்திகேயனோடு நல்ல நட்பில் இருந்தார் தனுஷ். ஆனால் சில காலங்களில் சிவகார்த்திகேயனுக்கும் இவருக்கும் மன கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனுஷ் கூறும்போது “என் வாழ்க்கையில் பலரை நம்பி மோசம் போயுள்ளேன்.
என் நம்பிக்கைக்குரிய நபர்களில் மிக முக்கியமான 4 நபர்கள் உள்ளனர். அதில் மூவர் என்னை ஏமாற்றிவிட்டனர். என்னை ஏமாற்றாத ஒரே ஆள் வெற்றி மாறன் மட்டும்தான்.
எல்லோரும் பெரும் வெற்றிகளை கண்டவுடன் என்னை தவிர்த்துவிட்டனர். ஆனால் பெரிய பெரிய வெற்றிகளை அடைந்த பின்னரும் கூட என் கூடவே இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும்தான்” என தனுஷ் கூறியுள்ளார்.