உங்களுக்கு அதை கொடுக்க முடியாது... சன் பிக்ச்சர்ஸ் மீது கடுங்கோபத்தில் தனுஷ்.! பின்னணி என்ன..?

இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று திரையரங்குககளில் வெளியான திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர், நித்தியா மேனன், ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பராதிராஜா, பிரகாஷ் ராஜ், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைபடத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்- அஜித் சொன்ன காது மேட்டர்.. ஏன் எதற்காக.?! குழப்பத்தில் ரசிகர்கள்..!
படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், சன் பிக்ச்சர்ஸ் மீது தனுஷ் மிகவும் கடுப்பில் இருக்கிறாராம். ஏனென்றால், திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தனுசுடன் பேசி ஒரு பேட்டி எடுக்கக் கேட்டுள்ளார்களாம்.
ஆனால் தனுஷ் மறுத்துவிட்டு நீங்கள் படத்தை தான் சரியாகவே ப்ரோமோஷன் செய்யவில்லையே நான் எதற்காக பேட்டிகொடுக்க வேண்டும் என்று தனுஷ் மறுப்பு தெரிவித்துவிட்டதாம். ஆனால் இது ஒரு புறம் உண்மை தான் ஏனென்றால், திருச்சிற்றம்பலம் படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் சரியாகவே ப்ரோமோட் செய்யவில்லை.