18 வருஷ பகையை பழிதீர்க்க காத்திருக்கும் தனுஷ்.!? சிக்குவாரா சிம்பு.?

by Manikandan |
18 வருஷ பகையை பழிதீர்க்க காத்திருக்கும் தனுஷ்.!? சிக்குவாரா சிம்பு.?
X

தமிழ் சினிமாவில் எப்போதும் இருதுருவ விளையாட்டு என்பது இருந்து கொண்டே இருக்கும். அது சிவாஜி - எம்ஜிஆர், ரஜினி - கமல், விஜய் - அஜித் என வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒரு இளம் இரு துருவம் என்றால் அது தனுஷ் - சிம்பு தான்.

இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவுக்குள் வந்து, ஒரே நேரத்தில் வளர்ந்து வந்ததால் இருவரையும் போட்டி நடிகர்களாக ரசிகர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் தங்கள் படங்களை ஒரே நாளில் வெளியிட்டது கிடையாது. ஆரம்ப காலகட்டத்தில் மட்டுமே நடந்துள்ளது.

ஆரம்பத்தில், 2004 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ஹரி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கோவில் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதே தேதியில் தனுஷ் நடிப்பில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படம் வெளியானது. இதில் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படம் சுமார் வெற்றிதான். ஆனால் கோவில் திரைப்படம் சிம்புவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அடுத்து 2004 தீபாவளிக்கு சிம்பு நடித்த மன்மதன் மற்றும் தனுஷ் நடிப்பில் ட்ரீம்ஸ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் வெளியானது. இதில் மன்மதன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. ட்ரீம்ஸ் திரைப்படம் வந்த தடம் தெரியாமல் போனது.

அதன் பிறகு மீண்டும் சிம்பு - தனுஷ் திரைப்படங்கள் ஒரே தேதியில் ரிலீசாகவில்லை. அப்படி இருக்க, 18 வருடத்திற்கு பிறகு, வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி மீண்டும் சிம்பு - தனுஷ் திரைப்படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகும் வாய்ப்பு வந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி ரிலீசாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதையும் படியுங்களேன் - விக்ரம் படத்தால் நொந்து போன கவர்ச்சி கன்னி.! தயவு செஞ்சு அப்படி நடிக்க சொல்லாதீங்க ப்ளீஸ்....

இதே தேதியில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முயற்சித்து இருந்தது. அதற்கான வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

அதற்கான டிரைலர், ரிலீஸ் தேதி அப்டேட் வெளியிடும் வேளையில் சிம்பு தந்தை டி.ராஜேந்தர் அவர்களுக்கு உடல் நலக்குறைவு காரணமாக தற்போது தந்தையுடன் சிம்பு அமெரிக்கா சென்றுள்ளார். அதன் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. ஆனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையிட தான் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

விரைவில், வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்படவாய்ப்பு உள்ளதாம். அப்படி ரிலீஸ் ஆனால், 18 வருட பழியை தனுஷ் தீர்ப்பாரா அல்லது மீண்டும் சிம்பு தான் கோலேச்சுவரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story