தனுஷிடம் வாலை ஆட்டிய சிம்பு...! சந்தானத்தால் வந்த சோதனை...!
தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைகளாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகர்களில் சிம்புவும் தனுஷும் முக்கியமானவர்கள். சிம்புவிற்கு பிறகு சினிமாவில் நுழைந்தவர் என்றாலும் தன்னுடைய கடின உழைப்பால் இன்று ஒரு பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று விளங்குபவர் நடிகர் தனுஷ்.
ஆரம்ப காலங்களில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்பு தன்னுடைய உடம்பாலயே வாய்ப்புகளை இழந்தார். பின் கடின உடற்பயிற்சி மேற்கொண்டு இன்று பல படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி வருகிறார்.
இந்த நிலையில் காமெடி நடிகராக சினிமாவிற்குள் வந்து ஹீரோவாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சந்தானம். இவரை சினிமாவிற்குள் வரவழைத்தவரே நடிகரே சிம்புதான். இப்படி இருக்கையில் தனுஷ் நடிப்பில் வெளியான மூணு என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக சந்தானம் தான் நடிக்க இருந்தாராம்.
இதை கேள்விப்பட்டு சிம்பு தனுஷ் படத்தில் சந்தானத்தை நடிக்க விடவில்லையாம். ஏனெனில் சிம்பு மூலமாக நுழைந்த சந்தானத்தை தனுஷ் படத்தில் நடிக்க வைக்க கூடாது என்ற காரணத்தில் தான் சந்தானத்தை நடிக்க கூடாது என கூறினாராம் சிம்பு. அதன் பிறகே சிவகார்த்திகேயன் என்ரி ஆனார் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.