இப்படியே போனா எப்படி?.. எப்பதான் அங்க வருவீங்க?... ஏக்கத்தில் தனுஷ் ரசிகர்கள்....

தனுஷ் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது. அதற்கடுத்து தனுஷின் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன.
ஆனால் அந்த படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி இணையதளத்தில் வெளியானது.
அதேபோல ஹிந்தியில் தனுசை அறிமுகப்படுத்திய ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்த திரைப்படம் கலாட்டா கல்யாணம். இந்த திரைப்படமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதற்கு அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியுள்ள மாறன் திரைப்படமும் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகிவிட்டது.
இதற்கு அடுத்ததாக தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மென் மேலும் திரைப்படமும் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த அறிவிப்புகளால் தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தலைவா உன்னை மீண்டும் எப்போது திரையில் பார்க்க போகிறோம் என ஏங்கி வருகின்றனர். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த விரைவில் ஒரு தியேட்டர் ரிலீஸ் திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.