உங்களால் மட்டும் எப்படி இப்படி செய்ய முடியுது! தனுசை பார்த்து மிரளும் ரசிகா்கள்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவா் தனுஷ். தொடா்ந்து திருடா திருடி, பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவா். இவரை பார்த்து முதலில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என்று ஏளனம் பேசியவா்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வளா்ந்து வரும் இவரது திறமை பார்த்து வாயடைத்து போய் நிற்கின்றனா். நடிப்பு மட்டுமல்லாது டைரக்ஷன், தயாரிப்பு, பாடல் என பன்முகம் படைத்தவா்.
தனது சொந்த வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் நடிப்பு என்று வந்து விட்டால் அவ்வளவு தான் பின்னி பெடலெடுத்து விடுவார். இன்றோடு அவா் திரையுலகத்திற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. திருமண வாழ்க்கையில் பிரிவை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தன்னுடைய திரை பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தனுஷ் படத்திற்கு படம் வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி வருகிறார். அவரது நடிப்பு திறமையை பார்த்து மிரண்டு போய் இருக்கிறது திரையுலகம். அவர் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களில் தனது தனித்துவமான நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி மேன்மேலும் வளா்ச்சி நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பா்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகா்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தளவுக்கு அந்த படத்தில் மிகவும் இளமையான தோற்றத்தில் அதாவது பள்ளி மாணவன் போன்ற தோற்றத்தில் தனது கேரக்டரை மாற்றி இருக்கிறார். இதை பார்த்த தனுசின் ரசிகா்கள் கொண்டாடி வருகிறார்கள்.