என்னது தனுஷே இல்லையா?.. பல குரல் மன்னனாச்சே.. எப்படிங்க செட் ஆகும்.. வடசென்னை - 2 அப்டேட் உண்மைதானா?

by Giri |   ( Updated:2025-04-02 08:47:57  )
Vadachennai
X

Vadachennai

வடசென்னை இரண்டாம் பாகம் குறித்து சற்றும் யாரும் எதிர்பார்க்காத ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்த 'வடசென்னை' படம் பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற கேள்வி சமூகத்தில் நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் தனித்தனியாகவே வேறு படங்களில் பிசியாக இருந்தனர்.

முதல் பாகம் வெளியானபோதே இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்று வெற்றிமாறன் கூறியிருந்தார். இதற்கிடையில், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் எங்கு சேர்ந்தாலும் 'வடசென்னை 2' பற்றி கேள்விகள் எழுந்துகொண்டேயிருந்தது.

தற்போது, 'வடசென்னை 2' பற்றிய நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன. முதல் பாகம் 2018 அக்டோபர் 17 அன்று வெளியானது. ஆறு வருடம் கழித்து, இறுதியாக இந்தப் பாகம் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் தகவல் கிடைத்துள்ளது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் இயக்குவார். வெற்றிமாறன் தயாரிப்பாளர் பொறுப்பில் இருப்பார். முக்கிய கதாபாத்திரங்களுக்கு புதிய நடிகர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இயக்குநர் இடத்தில் கார்த்திகேயன், கதாநாயகனாக காக்காமுட்டை, ஜெய் பீம், குட்நைட், குடும்பஸ்தன் படங்களில் நடித்த மணிகண்டன் நடிப்பார் எனத் தெரிகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

தனுஷ் இடத்தில் மணிகண்டன் அதுவும் வடசென்னை படத்தில் என்றால் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை, திரையில் எப்படி இது சக்ஸஸ் ஆகப்போகிறதோ என்று இப்போதே கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்க வட்டாரம். அவரவர் தோல்வி படங்களுக்கே இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கும்போது வடசென்னை தமிழ் சினிமாவின் முக்கிய வெற்றிப்படமாக இருக்கிறது. இதனை இரண்டாம் பாகம் எடுக்க ஏன் இத்தனை இழுவை இழுகிறார்களோ தெரியவில்லை.

Next Story