வாய்ப்பு கொடுத்த தனுஷுக்கே இந்த நிலைமையா.?! வெற்றிமாறன் கொடுத்த ஷாக் இதுதான்.!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரங்கள் தேடும் ஓர் இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன். சிலர் படங்கள் விருதுக்காக எடுத்து வருவர் சிலர் வசூல் செய்ய வேண்டும் என படம் எடுப்ப்பார்கள். ஆனால், இது இரண்டையும் செய்து காட்டியவர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன்.
கடந்த 13 வருடங்களில் அவர் இயக்கிய திரைப்படங்கள் வெறும் 5 மட்டுமே. அடுத்தது சூர்யா, விஜய், கமல் என நட்சத்திரங்கள் அவரது இயக்கத்தில் நடிக்க காத்திருக்கின்றனர். இவரை முதன் முதலில் இயக்குனராக அறிமுகப்படுத்தியது நடிகர் தனுஷ் தான். அவர் தான் பொல்லாதவன் படத்தை இயக்கும் வாய்ப்பை வெற்றிமாறனுக்கு பெற்றுக்கொடுத்தார்.
மேலும், தனுஷ் தான் எந்த கதாபாத்திரம் என்றாலும் தன் சொல் கேட்டு நடிப்பார் என்பதால் வெற்றிமாறன் தனுஷை வைத்தே 4 படங்கள் எடுத்துவிட்டார். தற்போது தனுஷின் மார்க்கெட் கொஞ்சம் டல்லடித்து வருகிறது. அவரது நாடியில் வெளியான கடைசி 3 படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. அடுத்து வரும் ஹாலிவுட் திரைப்படமும் நெட்பிளிஸ்க் OTT தளத்தில் வெளியாகிவிடும்.
இதையும் படியுங்களேன் - நடு ரோட்டில் 'அந்த' ஹீரோயினை அஜித் கட்டிபிடிச்சிட்டார்.! இப்டி வெளிப்படையா சொல்லிடீங்களே சார்.!
இதனால், மீண்டும் பழைய நிலைக்கு வர எண்ணிய தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க எண்ணி, அவருக்கு போன் செய்து கேட்டாராம். ஆனால், வெற்றிமாறன் தரப்பில் இருந்து நோ என்கிற விடை கிடைத்ததாக கூறப்படுகிறது. அவரையும் ஒன்றும் சொல்ல முடியாது. ஆம், தற்போது விடுதலை படம் எடுத்து வருகிறார்.
இதனை அடுத்து, சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் இருக்கிறது. அது பெரிய பட்ஜெட் திரைப்படம் கண்டிப்பாக ஒரு வருடம் தேவைப்படும். ஆதலால் உடனடியாக ஒரு படம் இயக்க வாய்ப்பில்லை என கூறிவிட்டாராம்.