இதுவரைக்கும் தோல்வியை பார்க்காத கூட்டணி...! காரணத்திற்கான ரகசியத்தை போட்டுடைத்த இயக்குனர்...
தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் தனது கெரியரை முதன் முதலின் நடிகர் தனுஷுடன் ஆரம்பித்தார். பொல்லாதவன் என்ற படத்தின் மூலம் தொடர்ந்த இவர்களது பயணம் அசுரன் படம் வரைக்கும் தொடர்ந்து கொண்டே வந்தது.
ஆடுகளம், வடசென்னை, அசுரன், பொல்லாதவன் போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்களை தனுஷு கூட்டணியிலயே கொடுத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சி என ஒரு மேடையில் வெற்றிமாறன் தெரிவித்தார். உதவி இயக்குனராக ஆரம்பித்த இவரது பணி இன்று ஒரு வெற்றி இயக்குனராக திரையில் சாதித்துக் காட்டியுள்ளார்.
அண்மையில் ஒரு பேட்டியில் இவரிடம் ரசிகர் ஒருவர் தொடர்ந்து தனுஷை வைத்து மட்டுமே படம் எடுக்கிறீர்களே? அது ஏன் என கேட்டார். அதற்கு வெற்றிமாறன் இதுவரைக்கும் எந்த மேடையிலும் சொல்லாததை சொல்கிறேன்.
அவரை வைத்து மட்டும் படம் எடுப்பதற்கு முக்கிய காரணம் அவர் மட்டும் தான் கதை கேட்காமல் நடிப்பார். மேலும் 4 டையலாக்கை 40 நாள் சூட் பண்ணாலும் அசற மாட்டார். கோபப்பட மாட்டார். வேறெந்த நடிகராக இருந்தாலும் இப்படி இருக்க மாட்டாங்க என்று கூறினார்.