நான் இப்படித்தான் நடிக்க ஆசைப்படுகிறேன்...ரெடியா இருந்தா வாங்க...! அழைப்பு விடுக்கும் தனுஷ்...
இந்திய சினிமாவில் சாதனை படைத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்நடிகர் தனுஷ். சாதாரண நடிகராக மட்டுமில்லாமல் சர்வதேச நடிகராக திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் இருந்து வந்து ஹாலிவுட், பாலிவுட் என அனைத்து பரிணாமங்களையும் பெற்று தற்போது நேரடியாக டோலிவுட்டில் களம் இறங்குகிறார் நடிகர் தனுஷ்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் படமான தி கிரே மேன் படம் உலக அளவில் பெருமையாக பேசப்பட்டது. மேலும் அங்கு அவருக்கு கிடைத்த அங்கீகாரம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவிற்கும் பெருமையை தேடித் தந்தது.
மேலும் இவர் நடிப்பில் தயாராகி வரும் திருச்சிற்றம்பலம் படம் வருகிற 18 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் தாய்கெலவி பாடல் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. படத்தை பார்க்க அனைவரும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஒரு நேர்காணலில் தனுஷ் தனது கதாபாத்திரம் இனிமேல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். அதாவது ரொம்ப நாள்களாகவே எனக்கு படம் முழுவதும் வில்லனாக நடிக்க விருப்பம் என கூறியுள்ளார். இதுபோதுமே லோகேஷுக்கு தெரிஞ்சா அலாக்க தூக்கிட்டு போயிருவாரே..!