Om Vs Gladiators: தனுஷுக்கு ஆப்பு வைக்கும் அஜித்!.. ஓம் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா?!..
தனுஷின் ஓம் படத்தை வெளியிடுவதில் சிக்கல்..

ராயன் படத்திற்கு பின் தனுஷின் நடிப்பில் வெளியான இட்லி கடை, குபேரா, கர போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமையவில்லை. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்கிற திரைப்படத்தில் தனுஷ் நடித்து முடித்திருக்கிறார்.
இந்த படத்தை அக்டோபர் 16ம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டனர். இந்த படம் தொடர்பான எல்லா போஸ்டர்களிலும் அந்த தேதிதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அக்டோபர் 15ம் தேதி ரஜினியின் ஜெயிலர் 2 படம் வருவதால் ஓம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என சிலர் சொல்கிறார்கள்..
தற்போது புதிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதியை ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன. ஓம் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஒருபக்கம் ஜெயிலர் 2 படம் காரணமாக நவம்பர் 20ம் தேதி படத்தைக் கொண்டு வரலாம் என்கிற முடிவில் தனுஷ் இருக்கிறாராம்.
இதை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனமே சம்மதித்தாலும் அந்த தேதிக்கு படத்தை கொண்டு வருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அஜித் தனது கிளாடியேட்டர்ஸ் ஆவண திரைப்படத்தை அக்டோபர் 19ம் தேதியில் கொண்டு வர முடிவெடுத்திருக்கிறாராம்.
சமீபத்தில் விஜய் லண்டன் சென்று அஜித்தின் கார் ரேசுக்கு புரமோஷன் செய்திருப்பதால் கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு தியேட்டரில் ஓப்பனிங் இருக்கும் என கருதப்படுகிறது.. இது ஓம் படத்தின் வசூலை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, ஓம் திரைப்படம் அக்டோபர் 16ம் தேதி வெளியாகுமா இல்லை நவம்பர் 20ம் தேதியா என்பது விரைவில் தெரிந்து விடும்.












