சூர்யா இல்லனா என்ன!.. என்கிட்ட வாங்க!.. ஹிட் பட இயக்குனருக்கு ரூட்டு போட்ட தனுஷ்!..

Published on: June 29, 2024
suriya
---Advertisement---

திரைத்துறையை பொறுத்தவரை ஒரு நடிகர் நடிக்க வேண்டிய படம் இன்னொரு நடிகருக்கு போவது சகஜமான ஒன்று. சிவாஜிக்கு போன கதையில் எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். ரஜினிக்கு சொல்லப்பட்ட கதையில் கமல் நடித்திருக்கிறார். விஜய் நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். அஜித்துக்கு சொல்லப்பட்ட கதையில் சூர்யா நடித்திருக்கிறார்.

விஜயும், அஜித்தும் சில நாட்கள் நடித்துவிட்டு வெளியேறிய படங்களில் அவர்களுக்கு பதில் சூர்யா நடித்திருக்கிறார். சினிமாவில் இது அடிக்கடி நடக்கும். அதற்கு பல காரணங்களை சொல்ல முடியும். கதை பிடித்திருந்தும் கால்ஷீட் கொடுக்க முடியாமல் போகும். கதை பிடிக்காமல் போகும். அல்லது சில நடிகர்கள் கதையை மாற்ற சொல்வார்கள். அதில், இயக்குனருக்கு விருப்பம் இருக்காது. இப்படி பல காரணங்களை சொல்லலாம்.

இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ க்கு பிறகு வெயிட்டான ஒரு விஷுவல் ட்ரீட் இருக்கு பாஸ்! நீண்ட வருட ரகசியத்தை உடைக்கும் கமல்

சூர்யாவின் திரை வாழ்வில் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது சூரரைப்போற்று. மணிரத்னத்தின் உதவியாளர் சுதா கொங்கரா இயக்கிய திரைப்படம். தேசிய அளவில் கவனம் பெறும்படி இருந்தது அப்படத்தின் கதை. இப்படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு பின் சில படங்களில் நடித்த சூர்யா மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அப்படி உருவான கதைதான் புறநானூறு. தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் எப்படி உருவானது?.. கல்லூரி மாணவர்கள் அதில் எப்படி பங்கேற்றார்கள்? அதற்கு பின்னால் இருந்த அரசியல் பற்றி அலசும் கதை.

ஆனால், இந்த கதையில் சில மாற்றங்களை சூர்யா சொல்ல இந்த படம் டேக் ஆப் ஆகவில்லை. சமீபத்தில் சுதாகொங்கராவை போனில் தொடர்பு கொண்ட சூர்யா ‘புறநானூறு கதை வேண்டாம். வேறொரு புதிய கதையை தயார் செய்யுங்கள். நான் நடிக்கிறேன்’ என சொல்ல சுதா கொங்கராவோ ‘எனது அடுத்த படம் அதுதான். நீங்கள் நடிக்கவில்லை எனில் வேறு ஒரு நடிகரை வைத்து எடுப்பேன்’ என சொல்லிவிட்டாராம்.

ஒருபக்கம் இந்த கதையில் நடிக்க நடிகர் தனுஷ் ஆர்வமாக இருக்கிறாராம். கல்லூரி மாணவர் வேடத்திற்கு சூர்யாவை விட தனுஷ் இன்னமும் செட் ஆவார் என்பதால் அவரே புறநானூறு படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. வாடிவாசல் படத்திலிருந்து சூர்யா விலகினால் அதில் நடிக்கவும் தனுஷ் ஆர்வமாக இருக்கிறார் என்கிற செய்தி ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.