சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் வச்ச கெடு! சொன்ன மாதிரியே செய்து காட்டிய நம்ம வீட்டுப் பிள்ளை

Actor Dhanush: தமிழ் சினிமாவில் தனுஷ் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். கோலிவுட் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து தன்னை தன் வளர்ச்சியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார் தனுஷ். ஏகப்பட்ட விமர்சனங்களை கடந்து இந்த இடத்தை அடைந்திருக்கிறார் என்றால் அவரின் மன உறுதியே காரணம் என்று சொல்லலாம்.

முதலில் இருந்ததை விட தனுஷிடம் இப்போது நிறைய மாற்றங்கள் இருப்பதாக நெருங்கிய பிரபலங்களே கூறி வருகிறார்கள். அவர் பேச்சில், நடத்தையில் , செய்கையில் என எல்லாவற்றிலும் ஒரு முற்போக்கான பார்வை இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: உருக்கிய இசை…. இதயத்தைக் கனக்கச் செய்த வரிகள்… தெவிங்கி தெவிங்கி அழுத ஜானகி

எப்படி இருந்தாலும் சமுதாயத்தில் ஒரு மதிக்கத்தக்க நடிகராக தற்போது தனுஷ் வளர்ந்து நிற்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் தனுஷ் சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிவகார்த்திகேயனை இந்த சினிமாவில் அறிமுகப்படுத்தியதே தனுஷ்தான் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆங்கராக வேலை பார்த்து வந்த சிவகார்த்திகேயனின் ஹியூமர் சென்ஸை பார்த்த தனுஷ் தன் 3 படத்தில் ஒரு இரண்டாவது நாயகனாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்தே சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஆரம்பமானது.

இதையும் படிங்க: எவன்டா அடிச்சது!… ராதாரவியும், வாகை சந்திரசேகரும் விஜயகாந்துக்காக செய்த தரமான சம்பவம்!…

ஆனால் தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே விரிசலும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு மேடையில் சிவகார்த்திகேயனை பார்த்து தனுஷ் ‘சிவா என் இடத்தை நெருங்கனும்னு ஆசைப்படாதீங்க. அதுக்கு இன்னும் 10 வருஷம் இருக்கு. நான் இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டேனு எனக்குத்தான் தெரியும். சுமாரான மூஞ்சியை வச்சிக்கிட்டு இப்பதான் ஒரு லெவலுக்கு வந்திருக்கேன்’ என காமெடியாக அந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. அதில் தனுஷ் சொல்லியதை போல 10 வருடம் கழித்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சி எப்படி மாறியிருக்கிறது என தனுஷே பார்த்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உறுதியான கூட்டணி! அஜித்தின் கெரியரை வேற லெவலுக்கு கொண்டு போகப் போகும் அந்த இயக்குனர்

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/MuhilThalaiva/status/1748360530275053662?s=20

 

Related Articles

Next Story