என்னது சூர்யாவா? சிக்ஸ் பேக் கான்ட்ரவர்சிக்கு பதிலடி கொடுத்த விஷால்

suriya (1)
Vishal:ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவை பற்றி சிவகுமார் பெருமையாக பேசியது பெரும் பேசு பொருளாக மாறியது. எந்தவொரு தகப்பனும் தன் மகன் தான் சிறந்தவன் என பேசுவது பொதுவானதுதான். ஆனால் ஒருவர் செய்ததை மறைத்து தன் மகன் தான் முதலில் செய்தது என்று சொன்னால் அதை பார்த்து முதலில் செய்தவருக்கு சிரிப்பு தான் வரும். அப்படித்தான் சூர்யா சம்பவத்திலும் நடந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தன் மகன் சூர்யாதான் முதன் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது. வேறு எவன்டா? அதற்கு பிறகும் வேறு எவனும் வைக்கவில்லை என்று சிவக்குமார் மாறு தட்டி பேசியது போல் அந்த விழாவில் தெரிவித்திருந்தார். அதிலிருந்தே சிவக்குமாரை நெட்டிசன்கள் வச்சு செய்ய ஆரம்பித்துவிட்டனர். பல ட்ரோல்களும் வெளிவர ஆரம்பித்துவிட்டனர். அதிலிருந்தே சூர்யாவுக்கு முன் யார் யாரெல்லாம் சிக்ஸ் பேக் வைத்தது என தேடவும் ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில் சிவக்குமாரின் இந்த கருத்தை பற்றி சமீபத்தில் விஷாலிடம் கேட்கப்பட்டது. இந்த கருத்தை பற்றி கேட்டதுமே விஷால் ஏளனமாக சிரித்துக் கொண்டு முதலில் சிக்ஸ் பேக் வைத்ததே தனுஷ் தான் என கூறினார். வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்திற்காக தனுஷ் தான் முதலில் சிக்ஸ் பேக் வைத்தது. அதன் பிறகு 2008 ஆம் ஆண்டில் சத்யம் திரைப்படத்திற்காக நான் வைத்தேன்.

அந்த படத்திற்கு பிறகு மதகஜராஜா படத்திற்காகவும் வைத்தேன். அதன் பிறகுதான் மற்றவர்கள். இதையெல்லாம் மறந்து பேசியிருப்பார்கள் என விஷால் கூறினார். விஷால் சொன்னதை போல முதலில் தனுஷ் தான் வைத்திருந்தார். ஆனால் இன்னும் சிலர் நடிகர் மொட்டை ராஜேந்திரன் தான் நான் கடவுள் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த நடிகர் என்றும் கூறி வருகிறார்கள்.
இந்த வரலாறு எல்லாம் சிவக்குமார் மறந்திருப்பார் போல. தேவையில்லாமல் வாயை விட்டு மாட்டிக் கொண்டார். இது முதல் முறை இல்லை. இப்படி பல வகைகளில் சிவக்குமார் ஏகப்பட்ட சர்ச்சைகளில் மாட்டியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.