கமல் நடித்த திரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷா?.. இது செம மேட்டரா இருக்கே!..

by Rohini |   ( Updated:2023-04-18 11:29:46  )
kamal
X

kamal

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் டிரெண்டாகி வருவது 80, 90களில் மிகவும் சூப்பர் ஹிட்டான படத்தை அதன் இரண்டாம் பாகமாக எடுத்து மீண்டும் அந்த படத்தின் பெருமையை நிலை நாட்டுவதே ஆகும். அப்படி பல படங்கள் நம் கண்களை அழகு படுத்தியிருக்கின்றன.

ரஜினியின் பில்லா படம் அப்பவே ஒரு பெரிய மாஸை உருவாக்கின. அந்தப் படத்தை மீண்டும் அஜித் நடிப்பில் உருவாக்கி அஜித்திற்கு ஒரு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்த படமாக பில்லா படம் அமைந்தது.

அந்த வகையில் கமல் நடிப்பில் மிகவும் வித்தியாசமான கதை களத்தோடு கமலுக்கே ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தோடு அமைந்த படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்ற திரைப்படம். இந்தப் படம் சைக்காலாஜிக்கல் திரில்லர் படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் கமல் ஒரு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் பல பேரை கொன்று தன் வீட்டு தோட்டத்தில் புதைக்கும் ஒரு சைக்கோவாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். 1978 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருக்க இளையராஜா இசையில் இந்தப் படம் 175 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சில வருடங்களுக்கு முன்பே பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இறங்கினார். ஆனால் அந்த முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது.

இப்போது வேறொரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார். ஒருவேளை இந்தப் படம் முடிந்தவுடன் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தலாம் என்று கூறினார். மேலும் கமல் நடித்த படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கூறினார். ஒரு வேளை எடுக்கும் முயற்சியில் மீண்டும் இறங்கினால் தனுஷை வைத்து தான் எடுப்பேன் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : சொந்த வீட்டுக்குள்ளயே திருட்டுத்தனமாதான் வருவார் விஜய்! – இது புது நியூஸா இருக்கே!..

Next Story