மீண்டும் டைரக்ஷனில் களமிறங்கும் தனுஷ்… ஆனா இது நடக்கிறதுக்கான காரணமே வேறயாம்…
Dhanush: நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக இரண்டு படங்களை இயக்கி வரும் நிலையில் மீண்டும் தன்னுடைய பிரச்சனை ஒன்றை முடிக்கும் விதமாக இன்னொரு படத்தையும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் தனுஷ் இயக்குனராகவும் தன்னுடைய ரூட்டை தெளிவாக மாற்றி இருக்கிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் சமீபத்தில் ராயன் திரைப்படம் திரைக்கு வந்தது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: காதலனை மிரட்டிய மேகா ஆகாஷ்… இதனால்தான் இந்த திடீர் திருமண அறிவிப்பா?
இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய அக்கா மகன் உள்ளிட்ட சில இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் பிரியங்கா மோகன் இடம்பெறும் பாடலை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் இனி புது படங்களை ஒப்புக்கொள்ளும் முன் தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளிக்கு தனுஷ் ஒரு திரைப்படம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படத்தை தனுஷ் முடித்துக் கொடுக்கவில்லை.
இதையும் படிங்க: நடிகையின் பாலியல் புகார்!.. ரியாஸ்கான் பதில் இதுதான்!.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!…
இதனால் அந்நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். தேனாண்டாள் தரப்பில் தனுஷூக்கு ரெட் கார்ட் கேட்கப்பட்டது. ஆனால் அவர் இதற்கு முன் சொன்ன கதை வேண்டாம். இன்னொரு புது கதையை இயக்கி தருவதாக தனுஷ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இதில் அவர் நடிப்பாரா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால் தனுஷ் மற்றும் தேனாண்டாள் தரப்பு குறித்து பெரிய பிரச்சினை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மற்ற பிரச்னைகள் விரைவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறதாம். இதனால் வேலை நிறுத்தம் நடக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.