தமிழ் சினிமாவில் இப்ப உள்ள டிரெண்டே எதாவது ஒரு பிரபல நடிகரை கேமியோ ரோலில் நடிக்க வைப்பதன் மூலம் அதன் வாயிலாக அந்த படத்தை விளம்பரப்படுத்துவதே ஆகும்.இந்த நிலை 80களில் தோன்றினாலும் இன்றைய கால சினிமாவில் அதுவே ஒரு தனி டெக்னிக்காக கருதப்படுகிறது.

லோகேஷின் விக்ரம் படம் தான் இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக கருதப்படுகிறது. விக்ரம் படத்தில் சூர்யாவின் கேமியோ ரோல் எந்த அளவு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து அசத்தினார். அது கூட விக்ரம் பட அளவு பேசப்பட வில்லை.
இதையும் படிங்க : ரசிகர்ளை மிரள வைத்த செம திகில் படம்!.. மீண்டும் களமிறங்கும் அதே கூட்டணி….
இப்படி தொடர்ந்து ஒரு பிரபல நடிகரை வில்லனாக பார்க்கும் சினிமா உலகம் வில்லன் கதாபாத்திரங்களுக்கு என்று நடிக்கும் நடிகர்களை மறந்து விடுகிறது. பிரகாஷ்ராஜ், ஆனந்த்ராஜ் போன்ற நடிகர்கள் அந்த காலத்தில் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் வில்லத்தனமான நடிப்பால் ரட்டி வைத்திருந்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்கள் இப்பொழுது குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை மிக்க கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கி விட்டனர்.

காரணம் ஒரு பிரபலமான நடிகரை வில்லனாக பார்க்க ஆரம்பித்து விட்டது தமிழ் திரையுலகம். என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜயின் நடிப்பு, மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி, இப்படி பல நடிகர்கள் எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக இருக்கின்றனர். அந்த வகையில் அஜித்தின் அடுத்த படத்தில் தனுஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் தனுஷை வில்லனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இது எந்த அளவுக்கு உண்மை என்று படக்குழு அறிவித்தால் மட்டுமே தெரியும்.

