Dhanush: திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் எப்போதும் எந்த இயக்குனர் டிரெண்டிங்கில் இருந்து ஹிட் கொடுக்கிறார் என கவனித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவர் ஹிட் கொடுத்துவிட்டால் உடனே அவரை தொடர்பு கொண்டு ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என பேசுவார்கள். இது எல்லா காலத்திலும் இருக்கும்.
ரஜினியே இளம் இயக்குனர்களை கூப்பிட்டு பேசி ‘எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என சொல்லுவார். அது நடக்குதோ இல்லையோ.. ஆனால், அந்த நம்பிக்கையை, உற்சாகத்தை கொடுப்பார். அதனால்தான் சீனியர் இயக்குனர்களுடன் மட்டுமே கூட்டணி போட்ட ரஜினி இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். கமலே லோகேஷ் இயக்கத்தில் நடித்து விட்டார்.

எல்லாம் காலம் கற்றுக்கொடுத்த பாடம். ரஜினி – கமல், விஜய் – அஜித் போட்டி போல சிம்பு – தனுஷ் என்கிற போட்டியும் சினிமாவில் இருக்கிறது. ஆனால், தனுஷை போல சிம்பு சின்சியராக சினிமாவில் நடிக்க மாட்டார் என்பதுதான் அவரின் பெரிய மைனஸ். இதனால், சிம்புவை ஓவர்டேக் செய்து பல படிகள் தாண்டி போய்விட்டர் தனுஷ். இப்போது இயக்குனராகவும் வெற்றிகளை கொடுக்க துவங்கிவிட்டார்.
சிம்புவோ ‘எவன் முன்ன போறாங்கறது முக்கியமில்லை.. எவன் முதல்ல வராங்கிறதுதான் முக்கியம்’ என தான் நடிக்கும் படங்களில் பன்ச் வசனம் பேசிகொண்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் டிராகன் படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டிருக்கிறது. 2025ல் இதுவரை வெளிவந்த படங்களில் இந்த படம்தான் அதிக வசூலை பெற்றிருக்கிறது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார்.

எனவே, சிம்புவின் 51வது படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. அவருக்காகவே டிராகன் படத்தில் ஒரு பாடலையும் சிம்பு பாடிக்கொடுத்தார். இது தொடர்பான வீடியோவும் ஏற்கனவே வெளியானது. இந்நிலையில், அஸ்வத்தை தொடர்பு கொண்ட தனுஷ் ‘நாம் இணைந்து ஒரு படம் பண்ணுவோம்’ என சொல்லியிருக்கிறாராம்.
பிரதீப்பை வைத்து மீண்டும் ஒரு படம் எடுப்பேன் என அஸ்வத் சொல்லியிருக்கும் நிலையில் அது நடக்காமல் போனால் அடுத்து தனுஷை வைத்து எடுப்பாரா இல்லை சிம்பு படத்தை முடித்துவிட்டு தனுஷிடம் செல்வாரா என்பது தெரியவில்லை.