விவாகரத்துக்கு பின் மீண்டும் சந்தித்து கொண்ட தனுஷ் - ஐஸ்வர்யா....! என்ன நடந்தது தெரியுமா?
பிரபல நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். சில மாதங்களாக இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் அவரவர் வேலையில் மிகவும் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. படமும் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதுதவிர தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன.
இந்நிலையில் தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
இதேபோல் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தற்போது மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த மியூசிக் ஆல்பத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் இருவரும் ஒரே ஹோட்டலில் தான் தங்கி உள்ளார்கள்.
இந்நிலையில் தனது நண்பர் ஒருவரின் பார்ட்டியில் தனுஷ் கலந்துகொண்ட போது அங்கு எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யாவை சந்தித்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டபோதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக கடந்து சென்றுள்ளனர். இதனால் இருவரும் மீண்டும் மனம் விட்டு பேசி இணைவார்கள் என எதிர்பார்த்த நண்பர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.