Connect with us

அவங்க கூடவே பண்ணிட்டேன்…தனுஷ் ஒன்னும் பெரிய விஷயமே இல்ல….! சொல்கிறார் க்ரைம் இயக்குனர்….

Dhanush-main_cine

Cinema News

அவங்க கூடவே பண்ணிட்டேன்…தனுஷ் ஒன்னும் பெரிய விஷயமே இல்ல….! சொல்கிறார் க்ரைம் இயக்குனர்….

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அண்மையில் வெளியாகி சக்க போடு போட்ட படம் சாணிக் காயிதம். இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கினார். மேலும் இந்த படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஒர் க்ரைம் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

dhanush1_cine

இதற்கு முன் ஏற்கெனவே அருண் மாதேஸ்வரன் ‘ வசந்த் ரவி’ நடிப்பில் உருவான ராக்கி படத்தை இயக்கினார். அந்த படமும் க்ரைம் குறித்து எடுக்கப்பட்ட படமாகும். சாணிக் காயிதம் அருண் மாதேஸ்வரனுக்கு இரண்டாவது படமாகும். எடுத்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பிரபலங்கள் பலரும் இவரை பாராட்டினர். ராக்கி படத்தில் பாரதி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

dhanush2_Cine

அருண் மாதேஸ் அடுத்து தனுஷை வைத்து படம் எடுக்கப் போவதாக அவரே அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மேலும் இவர் எடுக்கப்போகும் கதை முதல் இரண்டு படங்களில் இருந்து சற்று வேறுபட்டதாக இருக்கும் என கூறினார். அதாவது வரலாற்றில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை மையமாக வைத்து எடுக்கப் போகிறாராம்.

dhanush3_cien

இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே தனுஷிடம் கதை சொல்லி விட்டாராம். தனுஷுக்கும் கதை பிடித்து விட்டதாம். விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிப்போம் என்று இயக்குனர் கூறினார். மேலும் தொகுப்பாளர் மூன்றாவது படம் பெரிய நடிகரோடு இணைய போறீங்க எப்படி இருக்கு உங்கள் மன நிலை? என்று கேட்டார். அதற்கு அருண் ”சார் கீர்த்தியே ஒரு பெரிய ஸ்டார் தான் அவங்க கூடவே படம் பண்ணிட்டேன் , மேலும் முதல் படம் பாரதி ராஜா சார் அவங்க கூடவும் படம் பண்ணிட்டேன், தனுஷ் என்ன சார் அதெல்லாம் ஒன்றும் இல்லை, பண்ணிரலாம்” என்று கூலாக பதில் சொன்னார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top