இந்த நிலைமையிலையும் நடிகைக்கு உதவி செய்த தனுஷ்.... இருக்குற தலைவலி பத்தாது போல....!
பல அவமானங்கள் மற்றும் நிராகரிப்புகளை தாண்டி சினிமாவில் வெற்றி பெற்ற நடிகர் தனுஷ் சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வந்தார். பாலிவுட் டோலிவுட் ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ஒப்பந்தமாகி ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.
ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கூறி விவாகரத்து செய்தியை அறிவித்தார்கள். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் வட்டராமும் அதிர்ச்சியில் உறைந்தது.
தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டிருக்கும் தனுஷுக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதன்படி ஆரம்ப காலத்தில் தனுஷுடன் நடித்த நடிகை ஒருவர், தற்போது பட வாய்ப்பு கேட்டு அவரை விடாமல் டார்ச்சர் செய்து வருகிறாராம்.
தனுஷ் தற்போது இப்படி ஒரு சூழலில் இருக்கும் போது கூட விடாமல் அவரை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்க வாய்ப்பு தருமாறு கேட்டுள்ளார் அந்த நடிகை. இந்நிலையில் தனது சொந்த வேலைகள் மற்றும் பிரச்னைகள் காரணமாக வாய்ப்பு வழங்க முடியாத தனுஷ், வேறு படங்களில் அந்த நடிகைக்கு சிபாரிசு செய்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தும் கூட தன்னிடம் உதவி கேட்ட நடிகைக்கு தனுஷ் செய்துள்ள உதவியை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ஆனால் சிலரோ இந்த சமயத்தில் இதுபோன்ற தேவையில்லாத தலைவலி தேவைதானா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.