தனுஷால் ரஜினி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்.. வட போச்சே!...
கார்த்திக் சுப்பாராஜ் இயக்க தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படம் கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி நெட்பிளிகிஸ் என்ற OTT தளத்தில் வெளியானது. ஆனால், துரதிஷ்டவசமாக இப்படம் சிறப்பான, நேர்மறையான விமர்சனத்தையும், பாராட்டையும் பெறவில்லை. ஒரு சராசரி ஆவரேஜ் திரைப்படமாகத்தான் ஜகமே தந்திரம் வெளியாகியுள்ளது.
இதில், பல காட்சிகளில் தனுஷ் ரஜினியை நியாபகப்படுத்துகிறார். ரஜினியின் ஸ்டைலை அப்படியே காப்பி அடித்துள்ளார். அதை தெரிந்தேதான் செய்ததாக அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். சில காட்சிகளை கார்த்திக் சுப்பாராஜ் ரசிக்கும் படி அமைந்திருந்தாலும் சாதாரன கதை மற்றும் திரைக்கதை படத்திற்கு பெரும் பலவீனமாக அமைந்துவிட்டது.
இதனையடுத்து, ரஜினியிடம் ஒரு கதையை கூறியுள்ளாராம் கார்த்திக் சுப்பாராஜ் ஆனால் அதற்கு ரஜினி ஓகே சொல்லவில்லையாம் காரணம் இவர் இயக்கிய ஜகமே தந்திரம் படம் OTT யில் ரிலீஸ் ஆனது அதுமட்டுமில்லாமல் தற்போது "மகான்" OTT யில் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதனை அறிந்த ரஜினி ஓகே சொல்லவில்லையாம் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் விஷாலிடம் இப்படத்தை தயாரிக்க ஓகே வங்கியுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்-
சமந்தா மார்க்கெட்டை உச்சத்தில் ஏற்றிய அந்த பாடல்… நாலு பக்கமும் கூப்பிடுறாங்க…. |
அடுத்ததாக, இப்படத்திற்கு ரஜினி ஓகே சொல்ல வில்லை என்றால் விஷால் நடித்து விஷாலை தயாரித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கார்த்திக் சுப்புராஜ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'மஹான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்படும். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் இப்படம் வெளியாகிறதாம்.