தாத்தாவ வச்சே படம் எடுக்குறீங்க! அப்பா என்ன தக்காளி தொக்கா?.. தயாரிப்பாளரிடம் மல்லுக்கு நின்ன தனுஷ் மகன்..

Published on: October 20, 2023
dhanush
---Advertisement---

Rajiin vs Dhanush: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது தன்னுடைய 50வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது.

ஒரு பக்கம் ஹாலிவுட், பாலிவுட் என மற்ற மொழிப் படங்களிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார் தனுஷ். என்னதான் மாமனார் வீட்டில் பிரச்சினை இருந்தாலும் இன்றுவரை ரஜினியை தன் குருவாகவே பார்த்து வருகிறார் தனுஷ்.

இதையும் படிங்க: வெள்ளியங்கிரி FPO-க்கு தேசிய விருது வழங்கி கெளரவிப்பு – விவசாய உறுப்பினர்களுக்கு சத்குரு வாழ்த்து ..

தனுஷ் ஐஸ்வர்யா இவர்களுக்கு இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். எனினும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு  இருமகன்கள் இருக்கின்றனர்.

தனுஷ் எந்தவொரு நிகழ்ச்சிக்கு போனாலும் தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டுதான் செல்கிறார். அதே போல் அவ்வப்போது ஐஸ்வர்யாவுடனும் மகன்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: உங்கள வச்சி படம் பண்ண முடியாது!. விஜய்க்கு ‘நோ’ சொல்லிவிட்டு சிம்புவிடம் போன இயக்குனர்!…

பிரிந்து இருந்தாலும் மகன்களிடம் இருவரும் ஒரே மாதிரியான பாசத்தைத்தான் காட்டிவருகிறார்கள். இந்த நிலையில் பிரபல பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு தனுஷின் மகன் குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கூறினார். அதாவது ஒரு சமயம் ரஜினியை பார்ப்பதற்காக அவர் வீட்டிற்கு சென்றாராம் கலைப்புலி எஸ்.தாணு.

அங்கு தனுஷின் மூத்த மகன் இருந்தாராம். தாணுவை பார்த்ததும் ‘எங்க தாத்தாவை வச்சே பட எடுக்குறீங்க. ஏன் என் அப்பாவ வச்சு படம் பண்ண மாட்டீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு தாணு ‘அதற்கு உங்க அப்பாவ கால்ஷீட் கொடுக்க சொல்லு. நான் பண்றேன்’ என சொல்லிவிட்டு ரஜினியிடம் இதை சொன்னாராம்.

இதையும் படிங்க: ரசிகர்கள் முன்பே எம்.ஜி.ஆரை ‘வாடா போடா’ என அழைத்த அந்த இயக்குனர்!. அப்புறம் என்னாச்சி தெரியுமா?..

இதை கேட்டதும் ரஜினி சிரித்தாராம். அந்த நேரத்தில் கபாலி 2 படம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க கபாலி 2 டைட்டில் தனுஷ் கேட்டதாகவும் அவரிடம் கொடுத்துவிடும் படியும் தாணுவிடம் ரஜினி சொல்லியிருக்கிறார்.

உடனே தனுஷை பார்க்க தாணு சென்றாராம்.  எல்லாம் பேசி முடித்த பிறகு தாணுவிடம் தனுஷ் ‘ நாம எப்ப சார் சேர்ந்து படம் பண்ணலாம்?’ எனக்  கேட்டாராம். அதற்கு தாணு ‘இதே கேள்வியைத்தான் உங்க மகனும் கேட்டாரு’ என சொல்லி அப்படி ஆரம்பித்தது தான் வேலையில்லாத பட்டதாரி படம் என ஒரு பேட்டியில் தாணு கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.