Trending: 'தனியாளா தவிச்சாலும் இதுவே மேலு'.. ஹார்ட்ட மூடு!.. ரிலீசான 2 மணி நேரத்தில் ட்ரெண்டிங்கில் NEEK 2வது சிங்கிள்!..

by ramya suresh |   ( Updated:2024-11-25 09:14:57  )
dhanush
X

dhanush

தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி வருகின்றார்.

இதையும் படிங்க: ஐயப்பனை கொச்சைப்படுத்தல!.. இசைவாணிக்கு துணையா நாங்க இருக்கோம்?!.. அறிக்கை வெளியிட்ட இசைக்குழு!..

அதுமட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகின்றார். தற்போது சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார்.

இது மட்டும் இல்லாமல் ராயன் படத்தை இயக்கி முடித்ததற்கு பிறகு தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் கடந்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.

dhanush neek single

dhanush neek single

இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான முதல் சிங்கிள் 'கோல்டன் ஸ்பேரோ' என்கின்ற பாடல் பட்டையை கிளப்பி வருகின்றது. அதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் இன்றைய தினம் வெளியாகி இருக்கின்றது. ஜிவி பிரகாஷ் இசையில் இந்த பாடல் லிரிக்ஸ் வீடியோவாக வெளியாகி இருக்கின்றது.

'காதல் பெயிலா போச்சுடா' என்ற பாடல் ஒய் திஸ் கொலவெறி மோடில் உருவாகி இருக்கின்றது. இந்த பாடலை நடிகர் தனுஷ் எழுதி பாடியிருக்கின்றார். சூப் சாங்காக உருவாகி இருக்கும் இப்பாடலின் ஒவ்வொரு வரியிலும் காதல் தோல்வியை மிகச் சிறப்பாக காட்டி இருக்கின்றனர் நடிகர் தனுஷ்.

இதையும் படிங்க: சூர்யாவை விடாத கங்குவா ஜுரம்?!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!.. ஆனா இதுல அவரு தப்பிச்சுட்டாரு!..

இந்த பாடல் வெளியாகி இரண்டு மணி நேரத்தில் டாப் 10 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கின்றது. ஒய் திஸ் கொலவெறி பாடல் எப்படி உலக அளவில் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததோ அதேபோல் காதல் பெயிலா போச்சுடா என்ற பாடலும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பாடல் வரிகளை நடிகர் தனுஷ் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வருகிறார்கள்.

Next Story